இந்த நாட்டில் பெண்கள் வீட்டைத்தவிர வேறு எங்கும் சேர்ந்து செல்லவோ பேசவோ முடியாது. ஆனால் அதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது வருத்தத்திற்குரிய விஷயம்!!!
அண்மையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி தொடங்கிய பிறகு அங்குள்ள பெண்களின் வாழ்க்கைமுறை மோசமாகிவிட்டது. வீட்டில் இருந்து ஆண் துணை இல்லாமல் வெளியே போக முடியாது என்பதுத் தொடங்கி பெண்களுக்கான தடைப் பட்டியல் நீளமானது.
இறுதியில் வீட்டைத் தவிர சந்திப்பதற்கான மற்றொரு இடத்தை இந்த அபலைப் பெண்கள் கண்டுபிடித்துவிட்டார்கள் என்ற மகிழ்ச்சிக்கும் இறுதி காலம் நெருங்கிவிட்டதாம்!
தங்கள் அழகை மெருகூட்ட செல்லும் அழகு நிலையங்களே பெண்களின் சந்திப்பு இடமாக இருந்தன. ஆப்கானிஸ்தானில், பெண்கள் தங்கள் வீட்டைத் தவிர சுதந்திரமாக இருக்க முடிந்த ஒரே இடம் ஆண்கள் நுழையவே முடியாத பெண்களின் அழகு நிலையம் தான்.
ALSO READ | ஆபத்தில் ஆப்கானிஸ்தான்: பணம், நிலம் தந்து தற்கொலைத் தாக்குதலை ஊக்குவிக்கும் தாலிபான்
பெண்களுக்கு வருமானம் கொடுக்கும் இடமும் அதுவே, அவர்கள் செலவு செய்யும் இடமும் அதுவே…
தற்போது வாடிக்கையாளர்களுக்கான மகிழ்ச்சியான தருணங்களையும் வழங்கும் இடமாகவும் இருக்கிறது அழகு நிலையங்கள். ஆனால் இந்த ஒற்றை சுதந்திரத்தையும் பெண்கள் இழக்கும் நாட்கள் நெருங்கிக் கொண்டிருப்பதாக வெளிவரும் தகவல்கள் கவலைகளை அதிகரிக்கின்றன.
ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதிலிருந்து, பெண்கள் பொது இடங்களுக்கு வருவதே அருகிவிட்டது. அதற்கு காரணம் அச்சம் என்பது ஒருபுறம் என்றாலும், நேரடியான அச்சுறுதல்களாலும் பெண்கள் வீட்டிற்குள் முடங்கும் சூழல் ஏற்பட்டது.
ஆனால் ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியாளர்களின் அச்சுறுத்தல்களையும் மீறி மொஹடெஸா (Mohadessa) என்ற அழகுக்கலை நிபுணர் தனது அழகு நிலையத்தைத் திறந்து வைத்திருந்தார்.
READ ALSO | வங்க தேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்
ஆகஸ்ட் நடுப்பகுதியில் காபூலை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் மொஹடெஸாவின் அழகு கடை பெண்கள் மட்டும் தான், வீட்டிற்கு வெளியே ஓய்வெடுக்கவும், அவர்களின் கவலையைப் பற்றி விவாதிக்கவும், பொழுதுபோக்கவும் இருந்த ஒரே இடமாக மாறியது.
மொஹடெஸா அழகு நிலையத்திற்கு மட்டும் அச்சுறுத்தல் வரவில்லையா என்ன? தலிபான் கும்பல் அழகு நிலையத்திற்கு வெளியே கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர். ஆனால் தைரியமாக அவர் தனது அழகு நிலையத்தை திறந்தாலும், அடுத்த நாள் மீண்டும் திறக்க முடியுமா என்று நிச்சயமாக சொல்லமுடியாது. அச்சங்களுக்கு மத்தியில் தங்கள் வேலையை பெண்கள் செய்து வருகின்றனர்.
ஒரு திருமணத்திற்குச் செல்வதற்காக தயாராவதற்காக சுமார் 30 பெண்கள் அழகு நிலையத்திற்கு வந்தனர். அச்சம் இருந்தாலும், துணிச்சலாகக் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது அழகை பேரழகாக மாற்றும் விருப்பம் மட்டுமல்ல, உரிமைக்கான போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
READ ALSO | வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை; கண்டனம் தெரிவித்துள்ள ஜப்பான், தென் கொரியா...
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR