இஸ்ரேல் மற்றும் பாலஸ்த்தீனம் இடையிலான பிரச்சனை முதல் உலகப் போர் காலத்தில் இருந்தே உள்ளது. இரண்டு நாடுகளுமே ஜெருசலேம் தான் எங்களின் தலைநகர் என்று உரிமை கொண்டாடி வருகிறது. ஏனெனில், ஜெருசலம் பகுதியை இரு நாடுகளுமே தங்களின் புனித பூமியாக பார்க்கிறது. ஜெருசலேம் மட்டுமின்றி காசா, மேற்கு கரை போன்ற பகுதிகளும் தங்களுக்கு தான் சொந்தம் என இரு நாடுகளும் உரிம்னை கொண்டாடி வருகின்றன
இந்நிலையில், இஸ்ரேலுக்கும் (Israel) பாலஸ்தீனத்துக்கும் இடையில், கடந்த சில வாரங்களாகவே மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 1,050 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் மற்றும் மோட்டார் குண்டுகளை இஸ்ரேல் மீது வீசியதை அடுத்து மோதல் தீவிரமடைந்துள்ளது. அதிலும் வீசப்பட்ட சுமார் ஆயிரம் ராக்கெட்டுகள் மற்றும் மார்டார் குண்டுகள், இஸ்ரேலில் அதிக மக்கள் தொகையை கொண்ட பகுதியை நோக்கி வீசப்பட்டன. இவை சரியாக இலக்கை தாக்கியிருந்தால், உயிரிழப்புகள் மிக அதிகமாக இருந்திருக்கும் என்பது மறுப்பதற்கு இல்லை. ஆனால், அதி நவீன தொழில்நுட்பங்களில் சிறந்து விளங்கும் இஸ்ரேல், தன்னை தானே இதிலிருந்து காத்துக் கொண்டுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இஸ்ரேலின் இரும்பு குவிமாடம் (Iron Dome)
ALSO READ | எவரெஸ்ட் சிகரத்தில் எல்லை கோடு அமைக்க சீனா திட்டம்; காரணம் என்ன
இஸ்ரேலின் இரும்பு குவிமாடம் (Iron Dome) என்றால் என்ன?
இஸ்ரேலின் இரும்பு டோம் என்பது அமெரிக்காவின் நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவுடன் இஸ்ரேலிய நிறுவனங்களான, ரஃபேல் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இஸ்ரேல் விண்வெளி நிறுவனம் ஆகிய இரண்டும் இணைந்து உருவாக்கியுள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு ஆகும்.
2011 ஆம் ஆண்டில் முதன்முதலில் நிறுவப்பட்டது. இது தற்போது காசா பகுதியிலிருந்து சுடப்பட்டதைப் போன்ற குறுகிய தூர ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கிகளை தடுத்து நிறுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. நடுத்தர மற்றும் நீண்ட தூர இலக்குகளை தாக்கும் விமானங்கள், ட்ரோன்கள், ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்டவைகளை இது தடுத்து நிறுத்தி, நாட்டை காக்கும்.
பால்ஸ்தீனத்தின் பயங்கரவாத அமைப்பான ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதன், ஆயுதங்கள் மற்றும் உள்கட்டமைப்பை குறி வைத்து, காசா பகுதியில் 500 இலக்குகளை நோக்கி, இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 32 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் என்றும், 220 பேர் காயமடைந்துள்ளனர் என்று டைம்ஸ் ஆப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மைய நாட்களில் ரம்ஜான் மாதத்தை ஒட்டி, அல்-அக்ஸாவிற்கு பெருமளவிலான மக்கள் வந்த நிலையில், பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலிய போலீசாருக்கும் இடையே மோதல்கள் வெடித்ததால் பிரச்சனை தீவிரமடைந்தது.
ALSO READ | அமெரிக்கா மீது சைபர் தாக்குதல், அவசர நிலையை அறிவித்தது பைடன் அரசு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR