ரபாத் (மொராக்கோ): மொராக்கோ நாட்டை தாக்கிய பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2000 ஐத் தாண்டியது. 3 நாட்கள் துக்கத்தை அறிவித்த மொராக்காவில் நேற்றுக் அதிகாலை, ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான நிலநடுக்கம் உறங்கிக் கொண்டிருந்தவர்களை மீளாத்துயிலில் ஆழ்த்தியது. 2,012 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் மற்றும் 2,059 பேர் காயமடைந்தனர் என்று அரசு தெரிவித்துள்ளது.
இந்த பூகம்பம் மொராக்கோவில் நூற்றுக்கணக்கான கட்டிடங்களை அழித்துவிட்டது, மொராக்கோவின் முக்கிய நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த பயங்கர நிலநடுக்கத்தால் யுனெஸ்கோவின் பாரம்பரிய தளங்களும் சேதமடைந்துள்ளன.
மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட இந்த நிலநடுக்கத்தின் சேதங்கள் இன்னும் முழுமையாக மதிப்பிடப்படவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலர் வீடுகளை இழந்துள்ளனர். சனிக்கிழமையன்று நாட்டில் மூன்று நாட்கள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டது. இந்த துக்கக் காலத்தில் நாடு முழுவதும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சுத்தமான குடிநீர், உணவுப் பொருட்கள், கூடாரங்கள் மற்றும் போர்வைகளை வழங்குவதற்காக நாட்டின் ஆயுதப்படைகள் தங்கள் மீட்புக் குழுக்களை அனுப்பி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மொராக்கோவின் மன்னர் ஆறாம் முகமது, சிறப்புத் தேடல் மற்றும் மீட்புக் குழுக்களையும் அறுவை சிகிச்சைக் கள மருத்துவமனையையும் நிலைநிறுத்த ஆயுதப் படைகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் படிக்க | 60 ஆண்டுகளுக்குப் பிறகு பயங்கரமான நிலநடுக்கம்.. இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் பலி!
பூகம்பத்தில் சேதமடைந்த வரலாற்று கட்டமைப்புகள்
வெள்ளிக்கிழமை இரவு மொராக்கோவின் ஹை அட்லஸ் மலைகளை உலுக்கிய பூகம்பத்தால், மையப்பகுதிக்கு மிக நெருக்கமான நகரமான மராகேஷில் உள்ள வரலாற்று கட்டமைப்புகள் சேதமடைந்தன, ஆனால் பெரும்பாலான உயிரிழப்புகள் தெற்கே உள்ள அல்-ஹவுஸ் மற்றும் டாரூடன்ட் மாகாணங்களில் உள்ள மலைப்பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன என அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மீட்புக் குழுவினர் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக சாலைகளை சுத்தம் செய்யும் முயற்சிகளைத் தொடங்கினர்.
நிலநடுக்கம் 03:41:01 (UTC+05:30) மணிக்கு 18.5 கிமீ ஆழத்தில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் அளவு தெற்கில் உள்ள சிடி இஃப்னியிலிருந்து வடக்கிலும் அதற்கு அப்பாலும் உள்ள ரபாத் வரை தனது தாக்கத்தை ஏற்படுத்தியது. முக்கிய பொருளாதார மையமான மராகேஷுக்கு மேற்கே 72 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
அல் ஜசீராவின் கூற்றுப்படி, துருக்கிய பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மைத் துறை (AFAD) மருத்துவ, நிவாரணம் மற்றும் தேடல் மற்றும் மீட்பு நிறுவனங்களின் இருநூற்று அறுபத்தைந்து உறுப்பினர்களை தயார்நிலையில் வைத்துள்ளதாகக் கூறுகிறது. இந்த குழுக்கள் மொராக்கோவிலிருந்து அழைப்பு வந்தால் உடனடியாக மீட்புப் பணிக்கு விரையும்.
பிரதமர் மோடி இரங்கல்
நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளார். X சமூக ஊடகத்தில் தனது வருத்தத்தை பகிர்ந்துக் கொண்ட பிரதமர் மோடி, “மொராக்கோவில் நிலநடுக்கத்தால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், மொராக்கோ மக்களுக்கு ஆறுதல் சொல்கிறோம்.. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இந்த இக்கட்டான நேரத்தில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது, என இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார். .
அமெரிக்க அதிபர் பிடன் இரங்கல் தெரிவித்துள்ளார்
2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஞாயிற்றுக்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளார். மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகள் மற்றும் பாரிய பேரழிவுகளால் தான் "ஆழ்ந்த வருத்தம்" அடைவதாக அவர் கூறினார்.
(ANI இன் உள்ளீடுகளுடன்)
மேலும் படிக்க: இந்தியா - பாரத் சர்ச்சை ஒரு பக்கம்! பாரம்பரிய பேரை மாற்றிக் கொண்ட நாடுகளின் வரலாறு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ