"Periods" வந்ததா என பெண்களை காட்ட சொல்லி கொடுமை.. தனியார் கம்பெனியின் அட்டூழியம்!

யாருக்கு மாதவிடாய் உள்ளது என்பதை தெரிந்து  கொள்வதற்காக வேலை செய்யும் பெண்களுக்கு  அநீதி இழைக்கப்பட்ட சம்பவம் உலகத்திலேயே உலுக்கி உள்ளது.

Written by - Ezhilarasi Palanikumar | Last Updated : Jul 12, 2023, 08:28 PM IST
  • கென்யா நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பல பெண்கள் பணிபுரிகின்றனர்.
  • இவர்களுக்கு நிகழ்ந்த அநீதி உலகையே உலுக்கியுள்ளது.
  • இதற்கு எதிராக மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
"Periods" வந்ததா என பெண்களை காட்ட சொல்லி கொடுமை.. தனியார் கம்பெனியின் அட்டூழியம்! title=

சீஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில்  யாருக்கு மாதவிடாய் உள்ளது என்பதை தெரிந்து  கொள்வதற்காக அங்கு வேலை செய்யும் பெண்களுக்கு   அநீதி இழைக்கப்பட்ட சம்பவம் உலகத்திலேயே உலுக்கி உள்ளது. என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்.

தனியார் தொழிற்சாலை:

கென்யா நாட்டில் Browns food company என்ற சீஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெண் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்ட நிலையில் , அதற்கு பயன்படுத்திய napkin ஐ அதற்கான குப்பைத் தொட்டியில் போடுவதற்கு பதிலாக அந்த பெண் வேறு ஒரு குப்பை தொட்டியில் போட்டுள்ளார். இதனால் கோபமடைந்த  சீஸ் தயாரிக்கும் தொழிற்சாலையின் பெண் மேலாளர் கள் 3 பேர் யார் இந்த செயலை செய்தது என்று கேட்டுள்ளனர். அப்போது யாரும் இதனை ஒப்புக் கொள்ளாததால் அவர்கள் விபரீத முடிவு ஒன்றை எடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | சொந்த மகளை மணந்த தந்தை... அதுவும் 4வது மனைவியாகவா? - உண்மை இதுதான்!

World

மாதவிடாயை காண்பிக்க சொல்லி...

தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பெண்கள் அனைவருமே தங்களுக்கு அந்த நேரத்தில் மாதவிடாய் ஏற்பட்டதா இல்லையா என காண்பிக்க வேண்டும் என்று கூறி உத்தரவு பிறப்பித்துள்ளனர். அப்போது சில பெண்கள் தயங்கிய நிலையில் அவர்களை வலுக்கட்டாயமாக ஆடைகளை நீக்க சொல்லி வற்புறுத்தி உள்ளனர். இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து விவாத பொருளாகியுள்ளது.

இந்த விவகாரத்தை கண்டித்து பெண்கள் பலரும் வீதிகளில் இறங்கி போராட தொடங்கியுள்ளனர். இதனால் மிரண்டு போன அந்த சீஸ் தயாரிக்கும் நிறுவனம் முதல் கட்டமாக அந்த மூன்று பெண் மேலாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது பற்றி விசாரணையை தொடங்கியுள்ள அந்த நாட்டு காவல்துறை   இதற்கு முன்பும் சில நிறுவனங்களில் இது போன்ற குற்றச்சாட்டுகள் வந்ததாக தெரிவித்தனர்

இந்நிலையில் செனட் சபை உறுப்பினர் Gloria orwoba என்பவர் கென்யா நாட்டுப் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  பிரச்சாரம் செய்து வருகிறார். பொதுவாகவே கென்யாவில் வறுமை, ஊழல், சுகாதார பிரச்சனைகள் என பல சவால்கள் இருக்கும் நிலையில் 18 வயதை கடந்த பெண்களுக்கு கூட மாதவிடாய் பற்றிய புரிதல் சரியாக இல்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | கொடூர கொலை வழக்கில் தொடர்புடைய சைக்கோ கொலைகாரி-சிறையிலிருந்து விடுதலை..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News