எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடவேண்டாம்: ரஷ்யாவுக்கு ஜோ பிடன் எச்சரிக்கை!!

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் வெள்ளிக்கிழமையன்று, அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா தொடர்ந்து தலையிட முயற்சிப்பதாக ஒரு அறிக்கையை வெய்யிட்டுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 18, 2020, 12:09 PM IST
  • ரஷ்யர்கள் இன்னும் நமது தேர்தல் செயல்முறையை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் – பிடன்.
  • ரஷ்யாவிற்கு சரியான பதிலடி அளிக்கப்படும் என பிடன் எச்சரித்தார்.
  • ஜோ பிடன் இந்த உளவுத்துறை தகவல்களை எப்போது பெறத் தொடங்கினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடவேண்டாம்: ரஷ்யாவுக்கு ஜோ பிடன் எச்சரிக்கை!!  title=

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் (Democratic Party) அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் (Joe Biden) வெள்ளிக்கிழமையன்று ஒரு அறிக்கையை வெய்யிட்டுள்ளார். இதில் அவர், தனக்கு இப்போது உளவுத்துறை தகவல்கள் கிடைத்து வருவதாகவும், நவம்பரில் நடக்கவிருக்கும் அமெரிக்கத் தேர்தலில் (American Elections) ரஷ்யா தொடர்ந்து தலையிட முயற்சிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று கூறியுள்ளார்.

தனது பிரச்சாரத்திற்கான ஒரு ஆன்லைன் நிதி திரட்டலின் போது, பிடன், ஆதரவாளர்களிடம், 2020 தேர்தலின் முடிவுகள் பற்றிய குழப்பத்தை உருவாக்க சீனாவும் முயன்று வருவதாகத் தெரிவித்தார்.

“இது நமக்கு முன்னரும் தெரியும். ஆனால் தற்போது என்னால் உறுதியாகக் கூற முடியும். ஏனென்றால் எனக்கு இது குறித்த வலுவான தகவல்கள் கிடைத்துள்ளன.

ALSO READ: சட்டத்திற்கு கறுப்பு வெள்ளை என்ற பாகுபாடு கிடையது: டொனால்ட் டிரம்ப்

ரஷ்யர்கள் இன்னும் நமது தேர்தல் செயல்முறையை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது உண்மை," என்று பிடன் கூறினார்.

ரஷ்யா (Russia) தொடர்ந்து அமெரிக்காவின் விவகாரங்களில் தலையிட்டால், நவம்பரில் நடக்கவிருக்கும் தேர்தல்களில் குடியரசுத் தலைவர் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக தான் வெற்றி பெற்றால், ரஷ்யாவிற்கு சரியான பதிலடி அளிக்கப்படும் என பிடன் எச்சரித்தார்.

ஜோ பிடென் இந்த உளவுத்துறை தகவல்களை எப்போது பெறத் தொடங்கினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவரது பிரச்சாரம் கருத்து கோரலுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க துருப்புக்கள் மீது ரஷ்யா செய்யும் தலையீடு தொடர்பான உளவுத் துறை அறிக்கைகளின் பேரில் அமெரிக்க அதிபர் (American President) டிரம்ப் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்ற தகவல்களுக்குப் பின்னர், ஜூன் 30 பத்திரிகையாளர் சந்திப்பில் தனக்கு இது குறித்த தகவல்கள் வரவில்லை என்றும், தான் அதை கோரப்போவதாகவும் பிடன் தெரிவித்தார்.  முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் கீழ் துணை அதிபராக இருந்த பிடன், டிரம்ப் தனது உளவுத்துறை விளக்கங்களை படிக்கவில்லை என்று வந்த அறிக்கைகள் குறித்து விமர்சித்துள்ளார்.

முன்னதாக, 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ட்ரம்பிற்கு உதவ ரஷ்யா செயல்பட்டதாக பல அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்தன. எனினும் ரஷ்யா இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறது. டொனால்ட் டிரம்பும் (Donald Trump) இந்த குற்றச்சாட்டுகள் போலியானவை என்று தொடர்ந்து கூறி வந்துள்ளார். 

Trending News