அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஆள் அரவமற்ற இடத்தில் கண்டெய்னர் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அதை திறந்து பார்த்தபோது 50-க்கும் மேற்பட்டோர் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மருத்துவத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர்கள் கண்டெய்னரில் இருந்தவர்களை பரிசோதித்ததில் 46 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
மேலும் மயக்கமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 4 குழந்தைகள் உள்ளிட்ட 16 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை நடந்துவருகிறது.
இந்த கண்டெய்னர் லாரி மெக்சிகோவில் இருந்து வந்ததும் லாரிக்குள் இருந்த அனைவரும் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும் நோக்கத்தோடு வந்த அகதிகள் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடுமையான வெப்பம், மூச்சுத்திணறல் உள்ளிட்ட காரணங்களால் லாரி கண்டெய்னரில் 46 பேர் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
At Least 42 People Found Dead Inside Truck Carrying Migrants In Texas.
These deaths are on Biden.
They are a result of his deadly open border policies.
They show the deadly consequences of his refusal to enforce the law. https://t.co/8KG3iAwlEk
— Greg Abbott (@GregAbbott_TX) June 28, 2022
மேலும், லாரியுடன் இணைக்கப்பட்ட கண்டெய்னர் குளிர்சாதன வசதிகொண்டது. ஆனால், அந்த குளிர்சாதன வசதி வேலை செய்யவில்லை என காவல் துறையினர் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க | கண்டெய்னரிலிருந்து கொத்து கொத்தாக எடுக்கப்பட்ட உடல்கள் - அமெரிக்காவில் பயங்கரம்
இந்நிலையில் டெக்சாஸ் மாகாண ஆளுநர் கிரெக் அபோட் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், “ 46 பேர் பலியாகியுள்ளனர். இந்த மரணங்களுக்கு அமெரிக்க அதிபர் பைடன்தான் பொறுப்பேற்க வேண்டும். அமெரிக்கா - மெக்சிகோ எல்லைப் பிரச்னையில் பைடனின் மோசமான கொள்கையே இதற்குக் காரணம்” என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR