டெல் அவிவ்: இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போருக்கு மத்தியில், இரண்டு நாட்கள் காரசாரமான விவாதத்திற்குப் பிறகு இஸ்ரேல் போர்க்கால பட்ஜெட்டைத் அதிகரித்துள்ளது. போர்க்கால பட்ஜெட்டை நிறைவேற்றிய இஸ்ரேல், காஸாவில் ஹமாஸுக்கு எதிரான "இரும்பு வாள்" போருடன் தொடர்புடைய செலவுகளை திருத்தியுள்ளது.
584 பில்லியன் ஷெக்கல்கள் (USD 162 பில்லியன்) மதிப்புடைய திருத்தப்பட்ட மாநில வரவு செலவுத் திட்டம், சுமார் 70 பில்லியன் ஷெக்கல்கள் (USD 19.4 பில்லியன்) செலவின உயர்வைக் காட்டுகிறது. அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும் வலுப்படுத்தப்பட்ட பாதுகாப்பு திறன்களின் தேவை ஆகியவற்றால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போர் பட்ஜெட்
இராணுவத்தை வலுப்படுத்தும் நோக்கத்திற்காகவும் சண்டைச் செலவை ஈடுகட்டவும் பாதுகாப்புச் செலவினங்கள் அதிகத்துள்ளது; காசாவிற்கு அருகில் உள்ள குடியேற்றங்களைப் பாதுகாப்பதற்கும் அந்த குடியிருப்புகளுக்குப் பாதுகாப்பை வழங்குவதற்குமான ஏற்பாடுகளும் இதில் அடங்கும் என்று கூறப்படுகிறது.
இத்துடன், இது மனநலனை மேம்படுத்துவதற்கும் கணிசமான நிதியுதவியை வழங்குகிறது, , சுற்றியுள்ள பகுதியின் புனரமைப்பு, குடியேற்றங்களை முறைபடுத்துதல் மற்றும் உயர் தொழில்நுட்பம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையை சீரமைப்பது என பல கோணங்களைக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க | போர்க் கைதிகளுக்கு பாலியல் வன்கொடுமை! நாயை விட்டு கடிக்க வைத்த இஸ்ரேல்! UNRWA புகார்
இஸ்ரேல் பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரித்தது ஏன்?
இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட அதிகரிப்பு, பிராந்திய நிலைமைகள் நிலையற்று இருப்பதால், தேசிய பாதுகாப்பைப் பேணுவதில் அரசாங்கம் எவ்வளவு அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதைக் காட்டுகிறது.
கூடுதல் பணமானது, இராணுவ நடவடிக்கைகள், அதிநவீன ஆயுதங்களை வாங்குதல் மற்றும் முக்கிய உள்கட்டமைப்பின் பாதுகாப்பு போன்ற முக்கிய பாதுகாப்பு செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட் புதுப்பிப்பு என்பது, 2024 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 6.6 சதவிகித பற்றாக்குறையை முன்வைத்துள்ளதும், 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் சுமார் 20 பில்லியன் ஷெக்கல்கள் (5.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) அளவுகளில் சரி செய்ய வேண்டியிருப்பதையும் குறிப்பிடுகிறது.
மேலும் படிக்க | சிறுமியின் ஆபத்தான ஆசை... பல கோடிக்கு பிளாஸ்டிக் சர்ஜரிகள் - ஆனாலும் சந்தோஷம் இல்லை!
வருவாயை அதிகரிப்பதற்கான பல நடவடிக்கைகளுக்கும் அரசு அங்கீகாரம் கொடுத்துள்ளது. இதில் வங்கி இலாபங்களுக்கு வரி விதிப்பது மற்றும் இஸ்ரேலின் முக்கிய தொழிலாளர் சங்கத்துடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்கான மீட்பு நாளைக் குறைப்பது உட்பட பல விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த முடிவு, மாறிவரும் பாதுகாப்பு அபாயங்களை எதிர்கொண்டு தனது குடிமக்களைப் பாதுகாப்பதிலும் அதன் இறையாண்மையைப் பாதுகாப்பதிலும் இஸ்ரேலின் உறுதியான உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுகிறது. போரினால் பதட்டங்கள் அதிகரித்து வருவதால், புதிய சவால்களை கையாளவும், பாதுகாப்பு பொறிமுறையை வலுப்படுத்தவும் இஸ்ரேல் தயாராக இருக்க வேண்டியதன் அடிப்படையில் இந்த பட்ஜெட் அதிகரிப்பு நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது.
இதனிடையே, இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகளால் நடத்தப்பட்ட தாக்குதலின் போது, பாலியல் பலாத்காரம் மற்றும் கூட்டு பலாத்காரம் உட்பட பாலியல் வன்முறைகள் நடந்திருக்கலாம் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்ததன் பின்னணியிலும் இந்த விவகாரம் பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ