பெய்ஜிங்: சீனாவின் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி குறித்த கவலைகள் சீனாவில் அதிகரித்துள்ளன. சீன முதலீட்டு நிறுவனமான Zhongrong Trust, கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள் மற்றும் பணக்காரர்களுக்காக 87 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதியை நிர்வகித்து வந்தது. இந்த நிறுவனம், 2022 ஆம் ஆண்டின் இறுதியில் பல முதலீட்டு தயாரிப்புகளில் வட்டி மற்றும் அசலை கொடுக்க முடியாமல் போனதாக சி.என்.என் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கைகளின்படி, தவறவிட்ட கொடுப்பனவுகளின் அளவு 110 மில்லியன் யுவானை ($15 மில்லியன்) தாண்டியது.
Zhongrong Trustக்கு முன்னதாக, குறைந்தது மூன்று சீன நிறுவனங்கள் இதேபோல் நிதிச் சிக்கலை சந்தித்தன. நேசிட்டி ப்ராபர்ட்டி சர்வீஸ், கேபிசி கார்ப்பரேஷன் மற்றும் சியான்ஹெங் சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, சமீபத்திய வாரங்களில் Zhongrong டிரஸ்ட், அதன் பெருநிறுவன முதலீட்டாளர்களுக்கான கடமைகளைச் சந்திப்பதில் சிரமங்களை எதிர்கொண்டது.
இந்த நிறுவனங்கள் "நிழல் வங்கி" (shadow banking) தொழில்துறையின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றன, இது சீனாவில் ஒரு முக்கிய நிதி ஆதாரமாக உள்ளது. இந்த சொல் பொதுவாக முறையான வங்கி முறைக்கு வெளியே நடக்கும் நிதியளிப்புச் செயல்பாட்டைக் குறிக்கிறது, ஆஃப்-பேலன்ஸ்-ஷீட் செயல்பாடுகள் அல்லது அறக்கட்டளை நிறுவனங்கள் (trust firms) போன்ற வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் ஷேடோ பேங்கிங் என்று அறியப்படுகின்றன.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவின் எதிர்காலம் குறித்து அதிகரித்துவரும் உலக முதலீட்டாளர்களின் கவலைகள் சீனாவின் நிதியியல் நிலப்பரப்பின் மர்மமான மற்றும் மகத்தான பகுதியான "நிழல் வங்கி" துறை தொடர்பான கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், பெய்ஜிங்கில் உள்ள அதன் அலுவலகத்திற்கு வெளியே ஒரு போராட்டத்தைக் காட்டும் சமூக ஊடக வீடியோக்கள் வெளிவரத் தொடங்கியதால், Zhongrong நிறுவனம் தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ளன.
சமூக ஊடக செயலியான Douyin மற்றும் WeChat இல் வெளியிடப்பட்ட வீடியோக்களின்படி, சுமார் ஒரு டஜன் ஆர்ப்பாட்டக்காரர்கள் சீற்றத்துடன் முழக்கங்களை எழுப்புகின்றனர்,. இந்த வீடியோக்கள் புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், சி.என்.என் வெளியிட்ட செய்தி தொடர்பாக Zhongrong நிறுவனம் எந்தவித எதிர்வினையும் ஆற்றவில்லை என்பது குறிப்பிடத்தகக்து.
திங்களன்று, ஒரு அறிக்கையை வெளியிட்ட Zhongrong நிறுவனம், "குற்றவாளிகள்" முதலீட்டு தயாரிப்புகளை ரத்து செய்வது குறித்து வாடிக்கையாளர்களுக்கு தவறான அறிவிப்புகளை அனுப்பியுள்ளனர். இது முதலீட்டாளர்களை மோசடி குறித்து விழிப்புடன் இருக்கும்படி எச்சரித்தது ஆனால் முதலீட்டாளர்களுக்கு பணம் செலுத்த தவறிய விவகாரம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
Zhongrong நிதிச் சேவைகள், சுரங்கம் மற்றும் மின்சார வாகனங்கள் ஆகியவற்றில் செயல்பாடுகளைக் கொண்ட சீனாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் ஒன்றான Zhongzhi குழுமத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. டிசம்பரில் அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, குழுவின் முக்கிய நிதி அலகுகள் நிர்வாகத்தின் கீழ் ஒரு டிரில்லியன் யுவான் (138 பில்லியன் அமெரிக்க டாலர்) நிதியைக் கொண்டுள்ளன.
Zhongrong செலுத்தாத பணம் பற்றிய செய்திகளால் சமூக ஊடகங்களில் கொந்தளிப்பு காணப்படுகிறது. இது Zhongzhi குழுமம் பண நெருக்கடியால் பாதிக்கப்பட்டு அதன் பல முதலீட்டு தயாரிப்புகளில்ளுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய பணத்தை நிறுத்தியது என்ற ஊகங்களுக்கு மேலும் வலுவூட்டும் விதமாக இருப்பதாக சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவின்2.9 டிரில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டு அறக்கட்டளைத் துறையில் "தொற்றுநோய்" பரவும் என்று முதலீட்டாளர்கள் அச்சப்படுவதாக, சிட்டி ஆய்வாளர்களின் ஆய்வு அறிக்கையை மேற்கோள் காட்டி CNN செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்தத் தொழில் நீண்ட காலமாக சீனாவின் சிக்கலான ரியல் எஸ்டேட் துறையில் புழக்கத்தில் இருந்த நிலையில், தற்போது அதன் மோசமான சரிவில் சிக்கியுள்ளதால் இது நிகழ்ந்துள்ளது.
ஆனால் "முறையான அபாயங்கள்" வரம்புக்குட்பட்டவை என்றும் கூறப்படும் நிலையில், இது சீனாவிற்கு பெரிய அளவில் பொருளாதார சிக்கலை ஏற்படுத்தாது என்றும் கூறப்படுகிறது. இது உலகளாவிய நிதி நெருக்கடியில் மோசமான வீழ்ச்சியைக் குறிக்கும் என சி.என்.என் தெரிவித்துள்ளது.
"Zhongzhi, அதன் துணை நிறுவனங்கள் மற்றும் பிற செல்வ மேலாண்மை நிறுவனங்கள் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்களைப் பொறுத்தவரை, இந்த 1.13 டிரில்லியன் யுவான் மதிப்புள்ள நிதிகள் இப்போது பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன" என்று CNN ஆய்வு அறிக்கை, Nomura ஆய்வாளர்களை மேற்கோள் காட்டியது. இந்த பொருளாதாரக் கொந்தளிப்பு, நாட்டில் வளர்ச்சிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தலாம் என்று சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ