ஈராக்கின் புதிய பிரதமராக முகம்மது தவுபிக் அலாவியை, அதிபர் பர்ஹாம் சாலி நியமித்துள்ளார்.
கடந்த மாதம் 3-ஆம் தேதி ஈரான் படைத்தலைவர் காசிம் சுலைமானி, ஈராக் தலைநகர் பாக்தாத் வந்திருந்தபோது, சர்வதேச விமானநிலையம் அருகே அவரை ஆளில்லா விமான தாக்குதல் நடத்தி அமெரிக்கா கொன்றது. அதைத்தொடர்ந்து ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளத்தின் மீது 8-ஆம் தேதி ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் ஈராக்கின் புதிய பிரதமராக தவுபிக் அலாவியை, அதிபர் பர்ஹாம் சாலி நியமித்துள்ளார். சர்வதேச நாடுகளின் கண்காணிப்புடன் தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் தவுபிக் உறுதி அளித்துள்ளார். அமைச்சர் பதவி கேட்டு கட்சிகள் நெருக்கடி கொடுத்தால், ராஜினாமா செய்வேன் எனவும் பிரதமர் அலாவி எச்சரித்துள்ளார். கடந்த 4 மாதத்தில் மட்டும் போராட்டக்கார்கள் மீது ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 500 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.