எதிர் வரவிருக்கும் அமெரிக்க அதிபர்த் தேர்தலுக்காக முனைப்புடன் பணியாற்றுகிறார் Kylie Jenner என்ற 23 வயதான மாடல் அழகி. இன்ஸ்டாகிராமில் 200 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டைந்த மாடல் மங்கை ஒரு நல்ல காரணத்திற்காக தனது பிரபலத்தைப் பயன்படுத்துகிறார்.
அண்மையில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு செய்தியைப் பகிர்ந்து கொண்ட Kylie Jenner, 2020 அமெரிக்க அதிபர்த் தேர்தல்களில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டார்.
திங்களன்று, தனது இன்ஸ்ட்ராகிராம் கணக்கில் Vote.org என்ற வலைதள இணைப்பை பதிவிட்டார். இதனால், இதனால் வாக்காளர் பதிவு மற்றும் சரிபார்ப்புக் கருவியின் பயன்பாடு 80% அளவுக்கு அதிகரித்துள்ளதாக Fox News பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. Kylieயின் பதிவைத் தொடர்ந்து சுமார் 48,000 பயனர்கள் இந்த தளத்தை பயன்படுத்தியிருப்பதாக Vote.org என்ற வலைதளத்தின் செய்தித் தொடர்பாளர், ஃபாக்ஸ் நியூஸிடம் உறுதிப்படுத்தினார்.
வித்தியாசமான செய்தி | ஒரே இரவில் லட்சாதிபதியான பெண்: சிக்கியது மீன், அடித்தது Jackpot!!
"Kylie Jennerஇன் இன்ஸ்டாகிராம் பதிவுக்குப் பிறகு, Vote.org என்ற வலைதளத்தின் பதிவு சரிபார்ப்புக் கருவியுடன் தொடர்பு கொள்பவர்களின் அதிகரிப்பு என்பது, இந்த தேர்தலில் தங்கள் குரல்கள் கேட்கப்படுவதை உறுதிப்படுத்த விரும்பும் இளம் அமெரிக்கர்களின் தாக்கத்தை குறிப்பிடுகிறது" என்று Vote.org தலைமை நிர்வாக அதிகாரி Andrea Hailey தெரிவித்தார்.
Vote.org வலைத்தளம், இளம் வாக்காளர்களுக்கான பதிவு செயல்முறையை எளிதாக்க விரும்புகிறது.
நீங்கள் வாக்களிக்க பதிவுசெய்துள்ளீர்களா? என் பயோவில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும் என்ற பொருள்படும் "But are you registered to vote?Click the link in my bio ... Let’s make a plan to vote together" என்ற வாசகங்களை" என்று Kylie பதிவிடும்போது, அவரின் பிகினி உடை அணிந்த புகைப்படம் இன்ஸ்ட்ராகிராம் கணக்கில் இருந்தது.
வாக்கை எவ்வாறு பதிவு செய்வது என்பது பற்றிய அறிவுறுத்தலையும் Kylie தனது இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் படிப்படியாக கொடுத்துள்ளார். "இந்த நவம்பரில் அனைவரும் நமது குரல்களைக் கேட்க வேண்டும். இப்போது, முன்னெப்போதையும் விட, நமக்கு மாற்றம் தேவை" என்றும், "ஒரு மாற்றத்தை உருவாக்கும் அதிகாரம் நம்மிடம் உள்ளது, ஆனால் அதை பயன்படுத்துவதற்கு நாம் வாக்களிக்க வேண்டும்" என்று Kylie தனது பதிவில் குறிபிட்டுள்ளார். எழுதினார்.
இந்த ரியாலிட்டி டிவி-நட்சத்திரம் ரசிகர்களை வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டாள்ளார். ஆனால், எந்த குறிப்பிட்ட வேட்பாளருக்கும் ஆதரவாக அவர் இதுவரை ஏதும் பேசவில்லை.
இளம் வாக்காளர்களை கவர்வதற்கான புதிய வழிமுறை அரசியல்வாதிகளுக்கு கிடைத்துவிட்டது என்று சொல்லலாம். Start the Music வேட்பாளர்களே!!!!
இதையும் படிக்கலாமே | நிரந்திர வெள்ளை மாளிகை வேந்தன் நான்... அமெரிக்க அதிபர் Donald Trump அதிரடி..!!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR