சர்வதேச அளவில் உயர் பதவிகளில் தமிழர்கள்! சிங்கப்பூரின் புதிய அதிபராகிறார் தர்மன் சண்முகரத்தினம்

Tharman Shanmugaratnam: பிரிட்டனுக்குப் பிறகு, அரசின் உயர் பதவிகளில் ஒன்றை புலம்பெயர்ந்த இந்தியர்கள் அலங்கரிக்கின்றனர் என்பதும், அவர்கள் இருவருமே தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்பதும் சிறப்பு

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 2, 2023, 06:41 AM IST
  • சர்வதேச அளவில் உயர் பதவிகளில் தமிழர்கள்!
  • அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார் தர்மன் சண்முகரத்தினம்
  • சிங்கப்பூரில் உச்சம் தொட்ட இந்திய வம்சாவளி தமிழர்
சர்வதேச அளவில் உயர் பதவிகளில் தமிழர்கள்! சிங்கப்பூரின் புதிய அதிபராகிறார் தர்மன் சண்முகரத்தினம் title=

சிங்கப்பூர் அதிபராக தமிழர் ஒருவர் பதவியேற்கவிருக்கிறார். நேற்று (2023 செப்டம்பர் 1, வெள்ளிக்கிழமை) நடைபெற்ற தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த பாரத்வன்ஷி தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரிட்டனுக்குப் பிறகு, அரசின் உயர் பதவிகளில் ஒன்றை புலம்பெயர்ந்த இந்தியர்கள் அலங்கரிக்கின்றனர் என்பதும், அவர்கள் இருவருமே தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்பதும் சிறப்பு. தற்போது, சிங்கப்பூரில் இந்தியர்களின் செல்வாக்கு மேலும் அதிகரித்துள்ளது.   

சிங்கப்பூர் அதிபர் தேர்தல்

உலகெங்கிலும் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் வெற்றியின் புதிய அத்தியாயத்தை எழுதி வருகின்றனர். இந்த வரிசையில் சமீபத்திய பெயர் தர்மன் சண்முகரத்தினம். சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர், தர்மன் சண்முகரத்தினம் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் சண்முகரத்தினம் 70.4 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மும்முனைப் போட்டி நிலவிய நிலையில், பாரத்வன்ஷி தர்மன் சண்முகரத்தினம் அமோக வெற்றி பெற்றார்.

பாரத்வன்ஷி தர்மன் சண்முகரத்தினம்

66 வயதான தலைவர் தர்மன் சண்முகரத்தினத்தை தேர்ந்தெடுக்க 2.7 மில்லியனுக்கும் அதிகமான சிங்கப்பூர்வாசிகள் வாக்களித்தனர். நாட்டின் கலாச்சாரத்தை மேம்படுத்தவும், சிங்கப்பூரை உலகில் முக்கிய இடத்தில் வைக்க உறுதிபூண்டுள்ளேன் என்ற உறுதிமொழியுடன் அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தை முறையாக தொடங்கினார்.  பின்னிரவில் வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளில்,  சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் சண்முகரத்தினம் வெற்றி பெற்றுள்ளார் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மேலும் படிக்க | தென்னாப்பிரிக்காவில் பயங்கர தீ விபத்து! 63 பேர் பலி!

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த பாரத்வன்ஷி தர்மன் சண்முகரத்தினம்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தர்மன் சண்முகரத்தினம், சிங்கப்பூர்வாசிகளுக்கு நன்றி தெரிவித்தார். இந்தத் தேர்தலில் எனக்கு வாக்களித்தது, சிங்கப்பூரில் நம்பிக்கை வாக்கெடுப்பு என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார். நாம் அனைவரும் இணைந்து ஒன்றாக முன்னேற முடியும் என்பது நம்பிக்கையின் வாக்கு என்று அவர் கூறினார்.

1993ம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் அதிபரை தேர்ந்தெடுக்க தேர்தல்கள் நடைபெறுகின்றன. இது மூன்றாவது அதிபர் தேர்தல். சிங்கப்பூரில் அதிபரை தேர்தெடுக்கும் முதல் தேர்தல் 1993 இல் நடைபெற்றது, அதைத் தொடர்ந்து இரண்டாவது தேர்தல் 2011 இல் நடைபெற்றது.

சிங்கப்பூர் தேர்தல் ஆணையம்  (ELD) படி, நண்பகல் வரை சுமார் 1,406,182 சிங்கப்பூர்வாசிகள் மொத்தம்1,264 வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க வந்தனர். பதவி விலகும் அதிபர் ஹலிமா மற்றும் பிரதமர் லீ சியென் லூங் ஆகியோரும் அதிகாலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து, தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினார்கள்.

தர்மன் சண்முகரத்தினம் பின்னணி

சிங்கபூரில் பிறந்த இந்திய வம்சாவளி பொருளாதார நிபுணர் தர்மன் சண்முகரத்தினம், 2001ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். 2001ஆம் ஆண்டு ஜூரோங் தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர், துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் அறங்காவலர் வாரிய தலைவராகவும் பதவி வகிக்கிறார். 

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, அவர் ஆளும் மக்கள் செயல் கட்சியுடன் (PAP) பணியாற்றினார். அவர் பொதுத்துறை மற்றும் அமைச்சர் பதவிகளில் பணியாற்றினார். தர்மன் சண்முகரத்தினம், ஆறு ஆண்டுகாலம், நாட்டின் அதிபராக பணியாற்றுவார்.  

மேலும் படிக்க | பாகிஸ்தானில் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்... 9 பேர் பலி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News