உங்கள் முகத்தை ரோபோக்கு கொடுத்தால் 1.5 கோடி ரூபாய் கிடைக்கும் !

மனிதர்களுக்கு மட்டுமே குடியுரிமை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சவுதியில் 'சோபியா' என்ற ரோபோவிற்கு முதன் முதலாக குடியுரிமை அளிக்கப்பட்டது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 29, 2021, 06:50 PM IST
உங்கள் முகத்தை ரோபோக்கு கொடுத்தால் 1.5 கோடி ரூபாய் கிடைக்கும் ! title=

நம் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் அடையாளமே மனித ரோபோக்கள்.  இவை மனிதர்களால் மைந்த வேலையை செய்ய உருவாக்கப்பட்டவை.  இவை பொழுதுபோக்கிற்காகவும், பாதுகாப்பிற்காகவும், வேலைகளை செய்யவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  'எந்திரன்' படத்தின் மூலம் மனித ரோபோக்கள் மக்களிடத்தில் அதிகமாக பிரபலமானது. இந்த காலத்தில் ரோபோக்கள் பல ஆச்சர்யமான விஷயங்களை செய்து மனிதர்களை வியக்க வைக்கின்றன.  மனிதர்களுக்கு மட்டுமே குடியுரிமை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சவுதியில் 'சோபியா' என்ற ரோபோவிற்கு முதன் முதலாக குடியுரிமை அளிக்கப்பட்டது.  இதன்மூலம் ரோபோவின் முக்கியத்துவம், பயன்பாடு குறித்து அறியமுடிகிறது. 

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ரோபோ தயாரிக்கும் நிறுவனமான PROMOBOT மனித ரோபோக்களை தயாரிக்க மனிதர்களின் முக மாதிரிகளை கொடுத்தால் ரூ.1.5 கோடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.  பழகிய முகங்களின் வடிவங்களை ரோபோவிற்கு பயன்படுத்தினால் அதனை பயன்படுத்துவோருக்கு வசதியாக இருக்கும், அதுவே அறிமுகமில்லாத முகங்களாக இருந்தால் அது அவர்களுக்கு அவர்களுக்கு வசதியாக இருக்காது. 

roboty

இதற்கு முக மாதிரிகளை கொடுக்க சில நிபந்தனைகள் உள்ளது.  அதாவது, முக மாதிரியை கொடுக்கும் நபர் 25 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும், பின்னர் அவர்களின் முகம் மற்றும் உடலின் 3D மாதிரிகள் எடுக்கப்படும், அவரது குரலை அந்த ரோபோவிற்கு பதிவு செய்ய முக மாதிரியை கொடுக்கும் நபர் குறைந்தது 100 மணி நேரம் வார்த்தைகளை கூற வேண்டும்.  மேலும் அவர்கள் முகத்தின் மாதிரியை  ரோபோவிற்கு கொடுக்க வரம்பற்ற காலத்திற்கும் முக மாதிரியை பயன்படுத்தலாம் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.  இதன் பின்னரே தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு ரூ.1.5 கோடி வழங்கப்படும்.

ALSO READ தவறான தீர்ப்பால் 43 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த சோகம்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News