பசிபிக் பெருங்கடலின் 'Ring of Fire' என்றழைக்கப்படும் பகுதியில், பப்பூவா நியூ கினியா நாடு அமைந்துள்ளது. அதாவது அப்பகுதிகளில், செயலில் உள்ள எரிமலைகள் அதிகமிருக்கும். அதுமட்டுமின்றி அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதும் வழக்கம்.
அந்த வகையில், பப்பூவா நியூ கினியாவின் கிழக்கு பகுதியில், இன்று காலை மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளளது. ரிக்டர் அளவு கோளில் 7.6 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால், கடலோர நகரமான மடாங்க் மற்றும் அதன் சுற்றுவட்டார நிலப்பகுதிகளில் உள்ள கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கூகுளில் வேலைக்கு சேர்ந்த ஆடுகள் - சுற்றுச்சூழல் மாசை தடுக்க பலே திட்டம்
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலோர பகுதிகளில் சில அசாதரண சூழல் ஏற்படலாம் என்றும் புவியியல் மையம் தெரிவித்துள்ளது. கைனந்து நகரத்தில் இருந்து 67 கி.மீ., தொலைவிலும், 61 கி.மீ., ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்படுள்ளதாக அந்த மையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படும் பகுதியில் இருந்து, 480 கி.மீ., தொலைவில் உள்ள போர்ட் மோர்ஸ்பியின் தலைநகர் மற்று அதன் அருகில் உள்ள நகரங்கள் வரை இந்நிலநடுக்கம் பரவலாக உணரப்பட்டுள்ளது.
கோரோகா நகரத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில், நிலநடுக்கத்தால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும், காணொலிகளும் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றில், நிலநடுக்கத்தின் போது சுவர்களில் பெரிய விரிசல்கள் ஏற்படுவதும், ஜன்னல்கள் உடைவதும் தெரிகிறது. இதற்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கங்களை விட இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மிகவும் தீவிரமானதாக இருந்ததாக நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு மிக அருகில் உள்ள லே மற்றும் மடாங்க் நகரத்தில் வாழும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
EXCLUSIVO Primeros registros que se observan en las redes sociales tras el terremoto en la región de Nueva Guinea en #Papúa Nueva Guinea de magnitud 7.6 Mww.
Vídeo captado desde la Universidad de Goroka a 120 kilómetros de distancia del epicentro. pic.twitter.com/n17RQG9jhT
— EarthQuakesTime (@EarthQuakesTime) September 11, 2022
இதன் அண்டை நாடான இந்தோனேசியாவில், 2004ஆம் ஆண்டு 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டபோது, பல்வேறு இடங்களில் சுனாமி ஏற்பட்டது. இந்தோனேசியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அந்த சுனாமியால் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | சூரியனின் மேற்பரப்பா இது? வியக்க வைக்கும் புகைப்படங்களை எடுத்த சோலார் டெலஸ்கோப்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ