ஐதராபாத்தில் நடக்க இருக்கும் சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள், இவாங்கா நேற்று அதிகாலை இந்தியா வந்தார். நவம்பர் 28 முதல் 30 வரை ஹைதராபாத்தில் இவாங்கா இருப்பார்.
சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார். இம்மாநாட்டில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 1,500க்கும் அதிகமான தொழில் முனைவோர்கள் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் தேர்வு செய்யப்படும் 100 தொழில்முனைவோரை அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா சந்திப்பார்.
ஆனால் இவர் அமெரிக்க அதிபர் டிரம்பின் மகளாக இருப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு வர்த்தக பெண்மணியும் ஆவார். 36 வயதாகும் இவாங்கா டிரம்ப், தான் தந்தையின் வர்த்தகத்தையும் கையாளுகிறது. மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மூத்த ஆலோசகரும் ஆவார்.
இவாங்கா யுனிவெர்சிட்டி ஆப் பென்சில்வேனியாவில் வார்டன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் பட்டம் பெற்றவர். 2009 ஆம் ஆண்டில் அவர் ஜாரெட் குஷானரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர். 2007-ம் ஆண்டில் ஜூவல்லரி சேகரிப்பு ஒன்றை அறிமுகப்படுத்தினார். 2011-ம் ஆண்டு இவங்கா என்ற பெயரில் சில்லறை பேஷன் வர்த்தகத்தை தொடங்கினார். இதில், ஷூக்கள், கைப்பைகள், ஆடைகள், ஆபரனங்கள், நகைகள், வாசனை போன்ற பொருட்கள் ஆன்லைன் மற்றும் சில்லறை கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
இவங்கா அமெரிக்காவின் ஜனாதிபதியின் ஆலோசகராக பணியாற்றுகிறார், ஆனால் இதற்கு எந்த விதமான சம்பளமும் இவர் பெறுவதில்லை. ஆனாலும் ரூ 1,935 கோடிக்கு உரிமையாளர் ஆவார். இந்த வருவாய் அவரது வணிகத்தில் இருந்து வருகிறது என்று அவரே சொல்கிறார்.