ஈரான் அதிபர் தேர்தலில் ஹஸன் ரவுஹானி வெற்றி பெற்றுள்ளார். இவர் இரண்டாவது முறையாக அதிபராவது குறிப்பிடத்தக்கது.
இதில் தற்போதைய அதிபர் ஹசன் ரவுஹானி மற்றும் இப்ராகிம் ராய்சி ஆகியோர் போட்டியிட்டனர். நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வமாக ஓட்டு போட்டனர்.
அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டு இருந்த செய்திகளின்படி 70 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. சுமார் 4 கோடி பேர் வாக்களித்து இருந்தனர்.
இன்று காலையில் வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் பதிவான வாக்குகளில் 58.6 சதவிகிதம் வாக்குகளை பெற்ற ரவுஹானி வெற்றி பெற்றதாக இன்று பிற்பகல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட இப்ராகிம் ராய்சி 39.8 சதவிகித வாக்குகளை பெற்று தோல்வியை சந்தித்தார்.