டெல்லி: இந்தியாவில் நடந்த மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றான மும்பை 26/11 தாக்குதல்களின் சூத்திரதாரியான ஹபீஸ் சயீத்துக்கு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீதுக்கு இரண்டு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹபீஸ் சயீத் கட்டியதாகக் கூறப்படும் மசூதியும் மதரஸாவும் கையகப்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Pakistan anti-terrorism court sentences Lashkar-e-Taiba chief Hafiz Saeed to 31 years in jail: Pakistan media
(file pic) pic.twitter.com/ndrNG6dmzK
— ANI (@ANI) April 8, 2022
மேலும் படிக்க | பாகிஸ்தானில் அரசியல் கொந்தளிப்பு: இம்ரான் கட்சியின் மாற்று திட்டங்கள் என்ன?
பயங்கரவாத இயக்க தலைவனான ஹபீஸ் சயீதுக்கு ₹ 340,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
2020 ஆம் ஆண்டில், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்த வழக்கில் ஹபீஸ் சயீதுக்கு பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தால் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
70 வயதான ஹபீஸ் சயீத் இன்னும் பல பயங்கரவாத நிதியுதவி வழக்குகளிலும் தண்டனை பெற்றுள்ளார்.
இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஹபீஸ் சயீத்தை சர்வதேச பயங்கரவாதியாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. அவரை பிடிக்க தகவல் அளிப்பவர்களுக்கு அமெரிக்கா சார்பில் 10 மில்லியன் டாலர்கள் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாக கடந்த ஆண்டு ஜூலை 17ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் பிப்ரவரி 2021 இல் அவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. 71 வயதான ஹபீஸ் சயீத் இந்நாட்களில் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லஷ்கர்-இ-தொய்பா 2008 மும்பை தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, இந்தியா பல முறை பாகிஸ்தானுக்கு இது தொடர்பான ஆவணங்களை அனுப்பியுள்ளது. இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஹபீஸ் சயீத் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளது.
மேலும் படிக்க | ஷாபாஸ் ஷெரீப் "விரைவில்" பாகிஸ்தான் பிரதமராவார்: பிலாவல் பூட்டோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR