32 ஆண்டுகளில் 100க்கும் அதிகமானவர்களை கல்யாணம் செய்த ‘திருமண மார்கண்டேயன்’

Guinness World Records: 32 ஆண்டுகளில் 100 க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்த ஒருவர், அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார். அதிலும், அவர் தனது நூற்றுக்கணக்கான மனைவிகளில் ஒருவரைக்கூட விவாகரத்து செய்ததில்லையாம்!  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 7, 2023, 07:08 PM IST
  • நூற்றுக்கும் மேற்பட்ட மனைவிகள்!
  • விவாகரத்து என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாத கணவர்
  • 32 ஆண்டுகளில் 104 கல்யாணம் செய்துக் கொண்ட மனிதர்
32 ஆண்டுகளில் 100க்கும் அதிகமானவர்களை கல்யாணம் செய்த ‘திருமண மார்கண்டேயன்’ title=

உலகில் சாதனை செய்யத் துடிப்பவர்களையும், அதற்கான முயற்சிகளை பல்வேறு விதங்களில் எடுப்பவர்களையும் பார்த்திருக்கலாம். ஆனால், யாருமே நினைத்துக்கூட பார்க்காத ஒரு சாதனையை செய்திருக்கிறார் ‘என்றென்றும் புது மாப்பிளை’ ஒருவர். 32 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து அதிசய சாதனை செய்துள்ளார்.

32 ஆண்டுகளில் 100 க்கும் மேற்பட்ட திருமணங்கள்

ஒரு கல்யாணம் செய்தே சிக்கலில் சிக்கிக் கொண்டோம் என புலம்பும் ஆண்களுக்கு இடையே 100க்கும் மேற்பட்ட பெண்களை தனது துணையாக்கியுள்ள இந்த விந்தை மனிதர், 1949 மற்றும் 1981 க்கு இடையிலான 32 ஆண்டுகளில் நூற்றுக்கும் அதிகமான பெண்களை மணந்தார்.

நூற்றுக்கும் மேற்பட்ட முறை மாப்பிள்ளை கோலம்

சுவாரஸ்யமாக, இத்தனை திருமணங்கள் செய்தும் யாரையும் விவாகரத்து செய்யவில்லை குறிப்பிடத்தக்கது. இன்றைய கணக்குப்படி, உலகில் அதிகபட்ச திருமணங்கள் செய்து சாதனை படைத்துள்ளார். 

விவாகரத்தா? அப்படின்னா?

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்த ஜியோவானி விக்லியோட்டோ ஒரு முறை கூட விவாகரத்து செய்ததில்லையாம்.

கின்னஸ் சாதனை புத்தகம்

உலகில் யாரும் செய்திராத செயல்களை செய்தவர்களின் பெயர்கள் கின்னஸ் புத்தகத்தில் சேர்க்கப்படும். இந்த சாதனை புத்தகத்தில் தங்களுடைய பெயர் இடம் பெறுவதற்காக பலரும் பல விஷயங்களை செய்வார்கள்.

அதிக எடை, மிகவும் குறைந்த எடை, அதிக ஆயுள் வாழ்ந்தவர், நீண்ட தாடி வைத்தவர், அதிக உயரமானவர், குள்ளமானவர் என வித்தியாசமானவர்களின் பெயர்களை கின்னஸ் புத்தகம் பதிவு செய்கிறது.   

யார் இந்த ஜியோவானி விக்லியோட்டோ?

நூற்றுக்கும் மேற்பட்ட திருமணம் புரிந்த ஜியோவானி விக்லியோட்டோவின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. அதிக திருமணம் செய்துக் கொண்ட விந்தை மனிதரின் வீடியோவை கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

இந்த நபரின் பெயர் ஜியோவானி விக்லியோட்டோ. இது அவரது உண்மையான பெயர் இல்லை என்று கூறப்படுகிறது. அவர் தனது கடைசி மனைவியுடன் திருமணத்தின் போது அதே பெயரைப் பயன்படுத்தினார்.

திருமண மன்னன் பிடிபட்டது எவ்வாறு?

 53 வயதில் பிடிபட்டபோது, தனது பெயர், நிகோலாய் பெருஸ்கோவ் என்றும், தான் 1929 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி இத்தாலியின் சிசிலியில் பிறந்ததாக கூறினார். ஆனால் ஒரு வழக்கறிஞர் பின்னர் அவரது உண்மையான பெயர் ஃபிரெட் ஜிப் என்றும் அவர் ஏப்ரல் 3, 1936 அன்று நியூயார்க்கில் பிறந்தார் என்றும் கூறினார்.

104-105 பெண்களை திருமணம் செய்த மாப்பிள்ளை

1949 மற்றும் 1981 க்கு இடையில், Viglioto என்ற இந்த நபர் 105-105 பெண்களை மணந்தார். ஆச்சரியம் என்னவென்றால், இந்த பெண்கள் யாரும் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை. அதுமட்டுமின்றி, விக்லியோட்டோவைப் பற்றியும் யாருக்கும் அதிகம் தெரியாது.

இந்த நபர் 14 நாடுகள் மற்றும் அமெரிக்காவின் 27 வெவ்வேறு மாகாணங்களில் திருமணங்கள் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போலி அடையாளங்களை கொடுத்து பெண்களை சிக்க வைப்பது இந்த மோசடிப் பேர்வழியின் வழக்கம்.

மேலும் படிக்க | பாகிஸ்தானுக்கு கடன் கொடுப்பதில் தயக்கம்.. அரபு நாடுகளிடம் கியாரண்டி கேட்கும் IMF!

விக்லியோடோ இந்த பெண்களை சோர் பஜாரில் சந்திப்பார். தனது வலையில் விழும் பெண்களுடன் திருமணம் செய்துக் கொள்வார். தனது வீடு வெகு தொலைவில் இருப்பதாகவும், எனவே மனைவி தனது உடைமைகள் அனைத்தையும் லாரியில் போட்டு அனுப்பி விடுவார். பொருட்கள் கொண்ட லாரி சென்ற பிறகு, மனைவிகளை தொடர்பே கொள்ள மாட்டார்.

பொருட்களை திருடன் சந்தையில் விற்று, அடுத்த மனைவியைத் தேடிச் சென்றுவிடுவார். பல மனைவிகள் பல இடங்களில் பல முறை புகார் அளித்தும் மோசடிப் பேர்வழியை பிடிக்கமுடியவில்லை.

பல நாள் திருடன் அகப்பட்ட ஆச்சரியம்

மோசடி மன்னனிடம் கடைசியாக ஏமாந்த ஷரோன் கிளார்க் என்ற பெண் புளோரிடாவில் இந்தியானாவில் உள்ள திருடர்கள் சந்தையில் வேலை பார்த்து வந்தார். அவரை ஏமாற்றியதும், அவர் கொடுத்த புகாரின் பேரில் விக்லியோட்டோ 28 டிசம்பர் 1981 அன்று பிடிபட்டார்.

1983 இல் தொடங்கிய விசாரணையின் முடிவில் மோசடி மன்னனுக்கு 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இது தவிர, $336,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அவரது வாழ்க்கையின் கடைசி 8 ஆண்டுகள் அரிசோனா சிறையில் கழித்தார். அவர் 1991 இல் தனது 61 வயதில் இறந்தார்.

மேலும் படிக்க | ஒரே ஆண்டில் 80% விலை உயர்வு! விலை நிர்ணயக் கொள்கையை மாற்றும் மத்திய அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News