உலகம் முழுவதும் திருமண சடங்கு என்பது பல விதமாக நடைபெற்றாலும் அவை அனைத்தும் பெண்களின் வாழ்வியல் சூழலையும், வளர்ச்சியையும் பாதிக்கும் வகையில்தான் அமைகிறது. குழந்தை திருமணம், வரதட்சனை கொடுமைகள் உள்ளிட்ட அனைத்தும் பெண்களை நோக்கியே நகர்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளை பெற்றுதருவற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட பெண்கள், இன்றைய காலகட்டத்தில் உலகின் அனைத்து துறைகளிலும் கால் பதித்து அசாத்தியமான சாதனைகளை புரிந்து வருகிறார்கள்.
இருப்பினும் பெண்கள் மீதான பொருளியல் பார்வை மறைமுகமாக மனிதர்கள் மத்தியில் இன்றும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. திருமணம் என்று வரும்போது மாட்டை விலைபேசுவதுபோல் பெண்ணை விலை பேசுகிறீர்களே என்று கேள்விப்பட்டிருப்போம் ஆனால் தெற்கு சூடானில் மாட்டிற்காக பெண்களை விலை பேசி விற்கும் திருமண சந்தை நடந்து வருகிறது. அதாவது அந்த நாட்டில் மாட்டை விட மதிப்பு குறைந்தவர்கள் பெண் குழந்தைகள் என்ற நிலை நீடிக்கிறது.
மேலும் படிக்க | வெளியானது ‘வாரிசு' 4th LOOK- ஸ்டைலிஷ் விஜய்யின் புகைப்படம் வைரல்!
கர்பிணி பெண்கள் இறப்பு சதவீதத்திலும், குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறும் நாடுகள் பட்டியலிலும் கவனிக்கத்தக்க இடத்தில் உள்ள தெற்கு சூடான் நாட்டில் வருமை தலைவிரித்து ஆடிவருவதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் உள்நாட்டு போர் எனக்கூறப்படுகிறது. இதனால், பொதுவாக அந்நாட்டு மக்கள் அனைவரும் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வந்தாலும் பெண் குழந்தைகள்தான் இதற்கு பலிகடாவாக ஆக்கப்படுகிறார்கள்.
அங்கு சுமார் 10 சதவீதம் பெண் குழந்தைகள் மட்டுமே தொடக்கப்பள்ளிக்கு சென்று கல்வி கற்பதாகவும் அவர்கள் வயது வந்த உடன் அல்லது அதற்கு முன்பே திருமணம் என்ற வாழ்க்கைக்குள் வலுக்கட்டாயமாக தள்ளிவிடப்படுவதாகவும் கூறப்படுகிறது. சிறுமிகள் பள்ளிக்கு செல்வோம் என்றோ அல்லது திருமணம் செய்து கொள்ள மாட்டோம் என்ற தங்கள் கருத்தை சொல்லும் அளவுக்கு சுதந்திரமும் இல்லை எனக் கூறப்படுகிறது.
அது மட்டுமின்றி அங்கு இருக்கக்கூடிய மூட நம்பிக்கைகள் அனைத்தும் பெண்களை அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் வாழ விடாத சூழலை கட்டமைக்கும் விதத்திலேயே அமைந்திருக்கிறதாம். இப்படியான ஒரு சூழல் நிலவும் தெற்கு சூடானில் சிறுமிகளுக்கு கிடைக்கும் வரவேற்பிற்கு ஏற்ப அவர்களை 50 மாடுகள், 100 மாடுகள், 200 மாடுகள் என மாப்பிள்ளை வீட்டாரிடம் ஏலம் விட்டு, திருமணச்சந்தையில் பெற்றோர்கள் சிறுமிகளை விற்றுவிடுவதாக குழந்தை திருமணங்கள் குறித்து ஆராயும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க | விஜய்யின் ‘வாரிசு’ போஸ்டர்ஸ் 6.01 PM, 11.44 PMக்கு வெளியானது ஏன் தெரியுமா?
அலங்காரம் செய்யப்பட்டு சந்தையில் நிற்கவைக்கப்படும் சிறுமிகளை மாப்பிள்ளை வீட்டார் பார்த்து அவர்களின் அழகிற்கு ஏற்ப மாடுகளின் எண்ணிக்கையை நிர்நயம் செய்வார்களாம். அதற்கு சிறுமியின் வீட்டார் ஒப்புக்கொண்டால் மாட்டை பெற்றுக்கொண்டு சிறுமியை விற்றுவிடுவார்களாம். விலை மதிப்புடைய ஒரு பொருளாக பார்க்கப்படும் அந்நாட்டு சிறுமிகளின் நிலையை போக்க வேண்டும் எனவும் குழந்தை திருமணத்தை வரும் 2030ஆம் ஆண்டிற்குள் முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. இதனை ஏற்று தெற்கு சூடான் அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் மூட நம்பிக்கையில் மூழ்கி கிடக்கும் அந்நாட்டில் உள்ள சில பகுதிகளை சேர்ந்த மக்களின் மனநிலையை மாற்ற முடியவில்லை என அரசு அதிகாரிகள் பலரும் தகவல் அளித்துள்ளனர்.
மேலும் படிக்க | Mutual Fund: முதலீட்டை துவங்குவது எப்படி, எந்த ஆவணங்கள் தேவை, முழு விவரம் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR