கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திணறும் பாகிஸ்தான்! அதிகரிக்கும் நெருக்கடி!

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி: பாகிஸ்தானின் நிதியமைச்சர் இஷாக் டார் பலமுறை உறுதியளித்த போதிலும், நாட்டின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சர்வதேச சந்தை பாகிஸ்தான் உத்தரவாதங்களை நம்பத் தயாராக இல்லை.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 18, 2022, 09:16 PM IST
  • அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட பாகிஸ்தானில் வெள்ள சேதம் குறித்த உலக வங்கியின் அறிக்கை.
  • IMF மற்றும் பாகிஸ்தான் அரசு இடையேயான பேச்சுவார்த்தை நவம்பர் மூன்றாவது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திணறும் பாகிஸ்தான்! அதிகரிக்கும் நெருக்கடி! title=

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி: அரசியல் போராட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகளில் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றுக்கு மத்தியில், பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐந்தாண்டு  கிரெடிட் - டிபால்ட் - ஸ்வாப் என்னும்  (CDS) திட்டம் மூலம் நாட்டிற்கு கடன் கொடுத்தால் திரும்ப வருமா என்பது குறித்து அளவிடப்படுகிறது. CDS என்பது முதலீட்டாளரை பாதுகாக்கும் ஒரு வகையான காப்பீட்டு ஒப்பந்தமாகும்.

கிரெடிட்-டிஃபால்ட்  ஸ்வாப் புதன்கிழமை 56.2 சதவீதத்தில் இருந்து 75.5 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று ஆராய்ச்சி நிறுவனமான ஆரிஃப் ஹபீப் லிமிடெட் பரப்பிய தரவுகளை மேற்கோள் காட்டி டான் தெரிவித்துள்ளது. CDS சதவிகிதம் அதிகரிப்பு நாட்டில் ஒரு 'தீவிரமான சூழ்நிலையை' பிரதிபலிக்கிறது. எனவே அரசாங்கத்தினால் அந்நியச் செலாவணியை சந்தைகளில் இருந்து பத்திரங்கள் அல்லது வணிகக் கடன்கள் மூலம் திரட்டுவது மிகவும் கடினம்.

இந்த நிதியாண்டில் பாகிஸ்தானின் வெளிநாட்டுக் கடன்களை செலுத்த 32 பில்லியன் டாலர் முதல் 34 பில்லியன் டாலர் வரை தேவைப்படுகிறது. நிதி நிபுணர்களின் கூற்றுப்படி, மீதமுள்ள நிதியாண்டில் பாகிஸ்தானுக்கு இன்னும் 23 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகிறது. டான் பத்திரிக்கையில் அறிக்கையின்படி, பாகிஸ்தான் IMF திட்டத்தில் தொடர்ந்து உள்ளது. இது உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு வங்கி ஆகியவற்றிலிருந்து கடன்களைப் பெற அனுமதிக்கிறது.

நடப்பு நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறையை ₹1500 பில்லியனாக குறைப்பதாக பாகிஸ்தான் ஐஎம்எப் நிறுவனத்திடம் தெரிவித்திருந்தது. ஆனால், முதல் காலாண்டில் பற்றாக்குறை அதிகரிப்பால் நிலைமை மோசமாகி வருகிறது. கடந்த வாரம் பாகிஸ்தானுக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஒத்தி போடப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் படிக்க | பாகிஸ்தானில் இந்து சமூகத்தினரின் நிலை என்ன? இந்துக்களின் கலாச்சாரமும் உரிமைகளும்

டான் அறிக்கையின்படி, நவம்பர் தொடக்கத்தில் தொடங்கவிருந்த IMF மற்றும் பாகிஸ்தான் அரசு இடையேயான பேச்சுவார்த்தை நவம்பர் மூன்றாவது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியப் பொருட்கள் மீதான விற்பனை வரியை  சீர் செய்வதற்கும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட கடன் ஒப்பந்தத்தின் கீழ் தேவையான பிற நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பாகிஸ்தான் அளித்த தனது உறுதிமொழியில் செயல்படுத்திய பிறகு பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும்.

அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட பாகிஸ்தானில் வெள்ள சேதம் குறித்த உலக வங்கியின் அறிக்கையைத் தொடர்ந்து IMF மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் வெளிப்படுத்தின.

சர்வதேச சந்தையை நம்ப வேண்டாம்

கடன்களை திரும்ப செலுத்துவதாக பாகிஸ்தானின் நிதியமைச்சர் இஷாக் டார் பலமுறை உறுதியளித்த போதிலும், நாட்டின் பொருளாதாரம் சந்தைகள், நன்கொடையாளர்கள், வணிக வங்கிகள் மற்றும் நட்பு நாடுகளிடம் இருந்து கடனைப் பெறுவதன் மூலம் கடனைத் தவிர்க்க முற்படுவதால், சர்வதேச சந்தை இந்த உத்தரவாதங்களை நம்பத் தயாராக இல்லை.

அரசாங்கத்தின் நிலை

பணப்புழக்கத்திற்கு நிதியளிக்கவும், நிதிப் பற்றாக்குறையின் விரிவாக்கத்தைத் தவிர்க்கவும் புதிய வரிகள் தேவை என்று நிதித்துறை கூறியுள்ளது. அரசாங்கத்திற்கு குறைந்தபட்சம் ₹800 பில்லியன் தேவைப்படுகிறது, இது புதிய வரிகள் மூலம் அடையலாம் என்று அறிக்கைகள் கூறுகின்றன. இருப்பினும், பொருளாதார மற்றும் அரசியல் போராட்டங்களுக்கு மத்தியில் புதிய வரிகளை விதிப்பது அரசாங்கத்திற்கு மிகவும் சவாலானதாக இருக்கும்.

மேலும் படிக்க | இம்ரான் கானைக் கொல்ல 2 மாதங்களுக்கு முன்பே சதித்திட்டம் தீட்டப்பட்டதா? பகீர் புகார்

மேலும் படிக்க: கொடூர கொலையை நினைவுபடுத்திய டெல்லி சம்பவம்! மனைவியை 72 துண்டுகளாக வெட்டி வீசிய கணவன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News