Australia bans TikTok: டிக்டாக் செயலிக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலிய அரசாங்கம் செவ்வாயன்று, பாதுகாப்புக் காரணங்களுக்காக மத்திய அரசுக்குச் சொந்தமான அனைத்து சாதனங்களிலிருந்தும் TikTok ஐ அகற்றுவதாகக் கூறியது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 4, 2023, 10:29 AM IST
  • அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் டிக்டாக் செயலிக்கு தடை
  • மத்திய அரசுக்குச் சொந்தமான அனைத்து சாதனங்களிலிருந்தும் TikTok செயலியை அகற்றுவதாகக் கூறிய அரசு.
  • ஆஸ்திரேலியா-சீனா உறவுகள் பாதிப்பு.
Australia bans TikTok: டிக்டாக் செயலிக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா! title=

பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் டிக்டாக் செயலிக்கு தடை விதித்திருந்த நிலையில்,  ஆஸ்திரேலியாவும் டிக்டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது. ஆஸ்திரேலிய அரசாங்கம் செவ்வாயன்று, பாதுகாப்புக் காரணங்களுக்காக மத்திய அரசுக்குச் சொந்தமான அனைத்து சாதனங்களிலிருந்தும் TikTok ஐ அகற்றுவதாகக் கூறியது. சீனாவுக்குச் சொந்தமான வீடியோ செயலிக்கு எதிரான நடவடிக்கையைத் தொடங்கும் சமீபத்திய அமெரிக்க நட்பு நாடுகளின் பட்டியலில் அப்போது ஆஸ்திரேலியாவும் இணைந்துள்ளது. 

"சமூக ஊடகப் பயன்பாடுகள் மூலம் வெளிநாட்டு தலையீடுகள் மீதான மதிப்பாய்வு"  மீதான அறிக்கையை பெற்ற ஆஸ்திரேலிய அரசு, பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டாக்கை தடை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவெடுத்துள்ள நிலையில்,  ஆஸ்திரேலியாவின் முடிவால் "மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளோம்" என்று  டிக்டாக் நிறுவனம் கூறியது. இந்த விஷயம் "அரசியலுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை, உண்மையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று கூறியது.

"TikTok ஆஸ்திரேலியர்களுக்கு எந்த வகையிலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது என்றும், பிற சமூக ஊடக தளங்கள் போல்வே செயல்படுகிறது என்றும்,  பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதற்கு எந்த ஆதாரமும் இல்லை" என்று TikTok நிறுவனத்தின் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பொது மேலாளர் லீ ஹண்டர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | ராக்கெட் வேகத்தில் உயரும் விலைவாசி! ரமலான் மாதத்தில் கண்ணீர் விடும் பாகிஸ்தானியர்கள்!

ஆஸ்திரேலியா-சீனா உறவுகள்

2018ம் ஆண்டில், ஆஸ்திரேலியா சீனாவின் Huawei நிறுவனம் நாட்டில் 5G நெட்வொர்க்கின் வெளியீட்டின் போது உபகரணங்களை வழங்குவதைத் தடைசெய்த நிலையில், ஆஸ்திரேலிய சீன உறவுகள் பாதிக்கப்பட்டது. கோவிட்-19 பரவல் குறித்து ஒரு சுயாதீன விசாரணை தேவை என ஆஸ்தேரிய அரசு கூறியதை அடுத்து உறவுகள் மேலும் வலுவிழந்தன. இதற்கு பதலடி கொடுக்கும் வகையில் ஆஸ்திரேலிய பொருட்கள் மீது சீனா  வரி விதித்தது.

எனினும் எம்பிக்கள் மற்றும் அரசு அதிகாரிகள், தங்கள் தனிப்பட்ட தொலைபேசிகளில் TikTok ஐப் பயன்படுத்தலாம். ஆனால் மத்திய அரசு சேவைகள் அமைச்சர் பில் ஷார்டன் மற்றும் விக்டோரியா மாநில பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் உட்பட சிலர் தங்கள் TikTok கணக்குகளை நீக்க முடிவு செய்துள்ளனர். விக்டோரியா மாநில அரசாங்கத்திற்கு சொந்தமான தொலைபேசிகளிலும் செயலி தடை செய்யப்படும் என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

மேலும் படிக்க | 5 பயணிகளை விட்டுவிட்டு பறந்த விஜயவாடா - குவைத் விமானம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News