அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டிருக்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மீதான த்னது கசப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளார். அவர், ஃபாக்ஸ் பிசினஸ் நியூஸின் லாரி குட்லோவுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவின் வரி விகிதங்கள் குறித்து கேள்விகளை எழுப்பினார். ஒரே மாதிரியான வரி இருக்க வேண்டும் என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் கூறினார்.
இந்தியாவின் வரிவிதிப்பு
இந்தியாவின் வரிவிதிப்புக் குறித்து பேசிய டிரம்ப், சில அமெரிக்க தயாரிப்புகள், குறிப்பாக ஹார்லி-டேவிட்சன் பைக்குகளுக்கு இந்தியாவில் அதிக வரி விதிக்கப்பட்ட விவகாரத்தை முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சுட்டிக்காட்டினார். தான், மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அதே வரியை இந்தியாவின் மீது விதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்த காலத்தில், இந்தியாவை 'வரி ராஜா' என்று அழைத்தார். மே 2019 இல், அமெரிக்கச் சந்தையில் இந்தியாவிற்கு முன்னுரிமை அளிக்கும் விருப்பத்தேர்வுகளின் பொது அமைப்பு (Generalized System of Preferences (GSP)) ரத்து செய்யப்பட்டது.
இந்தியாவின் வரி விகிதங்கள் மிக அதிகமா?
இந்தியா தனது சந்தைக்கு நியாயமான முறையில் அணுகலை வழங்கவில்லை என்று குற்றம் சாட்டும் டிரம்ப், 'ஒரே மாதிரியான வரி, விதிப்பு இருக்கவேண்டும். ஆனால் இந்தியாவில் வரி அதிகமாக உள்ளது. இதை நான் ஹார்லி டேவிட்சன் (பைக்) மூலம் பார்த்தேன். இந்தியா போன்ற நாடுகளில் 100 சதவீதம், 150 சதவீதம், 200 சதவீதம் வரி விதிக்கின்றனர்” என்று டிரம்ப் தெரிவித்தார்.
பிரேசிலின் வரி முறை
இந்தியாவைப் பற்றி பேசிய டிரம்ப், 'இந்தியா நம்மீது வரி விதிக்கிறது என்றால், நாமும் அவர்களுக்கு வரி விதிக்க வேண்டும்' என்று கூறினார். அவர் இந்தியா மற்றும் பிரேசிலின் வரி முறை மீது கேள்விகளை எழுப்பினார்.
2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். அவருடன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி மற்றும் புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸ் ஆகியோர் ஜிஓபியில் இருந்து போட்டியிடுகின்றனர்.
குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர்களுக்காக புதன்கிழமை நடைபெறும் முதல் முதன்மை விவாதத்தில் பங்கேற்க டொனால்ட் டிரம்ப் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது முறையாக போட்டியிடும் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவற்றில், 2020ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல்களில் மோசடி செய்தார் என்பதும், அரசின் ரகசிய ஆவணங்களை கையாடல் செய்தது போன்றவை அவருக்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டுகளாக இருப்பதால், மீண்டும் டிரம்ப் தேர்தலில் போட்டியிடுவாரா என்பதும், போட்டியிட்டால், தேர்தலில் வெற்றிபெறுவாரா என்பதும் சந்தேகம் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | சீனாவில் அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடி! கடனை திருப்பிச் செலுத்த முடியாதது ஏன்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ