புதிய quarantine சட்டங்களின் கீழ் முகக்கவசங்கள் அணிவது கட்டாயம். விதிகளை மீறினால் ஆறு மாதம் சிறைவாசம் அல்லது 10,000 ரூபாய் அபராதம் விதிக்கும் நாடு எது தெரியுமா?
கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் ஒழுங்குமுறை (coronavirus quarantine regulation) குறித்து இலங்கை புதிய கெஜட் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, முகக்கவசங்கள் அணியாமல் இருப்பதும், சமூக இடைவெளியை பராமரிக்காவிட்டால் அது தண்டனைக்குரிய குற்றம். குற்றவாளிகளுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் அல்லது 10,000 அபராதம் செலுத்தவேண்டும்.
வியாழக்கிழமையன்று இலங்கை அரசு வெளியிட்ட கொரோனா நோய்த்தொற்று தடுப்புக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளின் கீழ், எப்போதும் முகமூடிகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இரண்டு நபர்களுக்கு இடையில் குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளியை பராமரிக்கவேண்டும். இரண்டில் ஒன்று தவறினாலும் தண்டனை நிச்சயம் என்று விதிமுறைகள் கடுமையாக எச்சரிக்கின்றன.
"புதிய விதிமுறைகளில் முதன்மையானது, பொது இடங்களுக்கு வரும் அனைவரும் எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதோடு, இரு நபர்களிடையே குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளியாவது பராமரிக்கப்பட வேண்டும்" என்று இலங்கையின் கெஜட் (Gazette) அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் கடுமையான இந்த சட்டத்தை மீறுபவருக்கு 10,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாத சிறைத்தண்டனை விதிப்பதில் எந்தவித மாற்றமும் கிடையாது என்று போலீசார் தெரிவித்தனர்.
சூப்பர் மார்க்கெட்டுகள், சில்லறை கடைகள் மற்றும் பொது போக்குவரத்து என அனைத்து பொது இடங்களுக்கும் இந்த விதிமுறைகள் நீட்டிக்கப்படுகின்றன.
அதேபோல், தங்கள் வளாகத்திற்கு வரும் அனைவரின் விவரங்களையும் பதிவு செய்ய வேண்டியது வியாபாரிகள் மற்றும் நிறுவனங்களின் பொறுப்பு என்று வர்த்தகத் துறைக்கும் கடிவாளம் போடப்பட்டுள்ளது.
அக்டோபர் 4 முதல் மேற்கு மாகாணத்தின் கம்பாஹா (Gampaha) மாவட்டத்தில் ஆடை ஏற்றுமதி தொழிற்சாலை உள்ள சுமார் 19 பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்தது. அதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் போலீஸ் ஊரடங்கு (police curfew) உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பின்னர் இந்த ஊரடங்கு உத்தரவானது, சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டது, அங்கு ஏற்றுமதி ஊக்குவிப்பு மண்டலத்தில் (export promotion zone) பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருக்கின்றனர்.
அக்டோபர் 15ஆம் தேதி வரை, இலங்கையில் மொத்தம் 5,244 பேருக்கு கொரோனா வைரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 3,380 பேர் குணமாகிவிட்டனர். மொத்த உயிரிழப்பு 13 பேர் என்பது அரசுக்கு சற்றே நிவாரணம் அளிக்கும் செய்தி.
அக்டோபர் 15ஆம் தேதியன்று ஆடை ஏற்றுமதி தொழிற்சாலையில் 1,720 பேருக்கு கொரோனா தொற்று இருந்ததை அடுத்து, இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை srilanka அரசு மேற்கொண்டுள்ளது.
Read Also | கோவிட் -19 அதிகம் பாதிக்காத blood group எந்த குரூப்? அது உங்களுடையதா?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR