தாய்பி: தைவானின் கிழக்கு கடற்கரைக்கு அருகே ஒரு ரயில் தடம் புரண்டதில் குறைந்தது 41 பயணிகள் கொல்லப்பட்டனர், டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
350 பயணிகள் ரயிலில் இருந்தனர்
ரயிலில் 350 பயணிகள் இருந்ததாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. நான்கு நாள் நடக்கும் டோம்ப் ஸ்வீப்பிங் விழாவின் முதல் நாளில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. செங்குத்தான குன்றின் வழியாக சென்ற ஒரு லாரி கீழே விழுந்தது என்றும் அப்போது சுரங்கத்தின் வழியாக சென்று கொண்டிருந்த ரயில் அதன் மீது மோதியது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரயிலின் பெரும்பகுதி இன்னும் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளது. இதனால் பயணிகளை வெளியே பாதுகாப்பாக மீட்பது கடினமாகிவிட்டது. பயணிகளை பாதுகாப்பாக மீட்பதற்கு கதவுகள், ஜன்னல்கள் மற்றும் கூரைகளில் மீட்புப்பணியினர் ஏற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
ALSO READ: உலகின் மிகப் பெரிய டெலெஸ்கோப் FAST; சீனாவின் பிரம்மாண்டமான Sky Eye
5 ரயில் பெட்டிகளில் மிக அதிக சேதம்
தாய்வானில் (Taiwan) அரசாங்க விடுமுறையான வெள்ளிக்கிழமை, டொரொகோ ஜார்ஜ் சுற்றுலா பகுதிக்கு அருகே, வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. ரயில் சுரங்கப்பாதையில் இருந்து வெளியே வந்தவுடனேயே மேலிருந்து டிரக் விழுந்தது என ஹூலியன் கவுண்டியின் மீட்புத் துறை தெரிவித்தது. இதனால் முதல் ஐந்து பெட்டிகளுக்கு அதிக சேதம் ஏற்பட்டது என்றும் ஹூலியன் கவுண்டி மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் (Accident), ஒரு பெட்டியின் உள் பகுதி முற்றிலுமாக சேதமடைந்து இருக்கைகளில் வந்து விழுந்தது.
அதிகாரப்பூர்வ மத்திய செய்தி நிறுவன இணையதளத்தில், சம்பவ இடத்தில் இருந்தவர்களின் படங்கள் வெளியிடப்பட்டன. டிவி காட்சிகளில், சுரங்கப்பாதையின் நுழைவாயிலுக்கு வெளியே ஒரு ரயில் பெட்டியின் திறந்த வாயிலில் மக்கள் ஏறுவதைக் காண முடிகிறது.
ALSO READ: 12 மணியே அடிக்காத கடிகாரம் கூட இருக்கு தெரியுமா? காரணம் காதல் தான்...யார் மீது?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR