Surging Corona Cases: அமெரிக்காவில் COVID-19 வழக்குகளில் திடீர் அதிகரிப்பு காணப்படுகிறது. அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையிடம் மருத்துவமனைகள் தெரிவித்த தரவுகளின்படி, அதிகரித்து வரும் கோவிட் பாதிப்பு குறித்த தகவல்கள் அம்பலமாகியுள்ளன. கோவிட் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை மற்றும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் பெரும்பாலான மாகாணங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கலிபோர்னியா மற்றும் நியூ மெக்ஸிகோவில், இந்த அதிகரிப்புகள் மிகவும் அதிக அளவில் உள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூ மெக்சிகோவில் 75 சதவீதம் கோவிட் வழக்குகள் அதிகரித்துள்ளன. இது தவிர, கடந்த நான்கு வாரங்களில் சுமார் 114000 குழந்தைகளும் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கைகள் கூறுகின்றன.
மேலும் படிக்க | தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படும்! இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா?
2020 ஆம் ஆண்டில் கோவிட் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து 15 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு கோவிட்-19 நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல்கள் கவலை அளிக்கக்கூடியவையாக இருக்கிறது. இந்தத் தரவுகளை அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (ஏஏபி) மற்றும் குழந்தைகள் மருத்துவமனை சங்கம் வழங்கியுள்ளன.
கோவிட் பாதிப்பு அமெரிக்காவில் மட்டும் அதிகரிக்கிறதா? என்ற கேள்விக்கு இல்லை என்ற பதிலே, உலக நாடுகளிடம் இருந்து வருகிறது.
ஆஸ்திரேலியாவில் கோவிட் வழக்குகள்
ஒரு நிபுணரின் கணிப்புகளின்படி, சுமார் 500,000 ஆஸ்திரேலியர்கள் தற்போது COVID-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத் துறையின் சமீபத்திய தரவுகளின்படி, நவம்பர் மாதத்தின் ஒவ்வொரு நாளும் 14,000 க்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவாகியுள்ளன. உண்மையான எண்ணிக்கை என்பது, கணிக்கப்பட்டுள்ள எண்களை விட அதிகமாக இருக்கலாம்.
மேலும் படிக்க | Zero Covid: சீனாவில் மக்கள் போராட்டம்! 'ஜீரோ-கோவிட்' கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு
இந்தியாவில் கோவிட் வழக்குகள்
இந்தியாவைப் பொறுத்தவரை, மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பான செயலில் உள்ள வழக்குகள் கணிசமாக 4,255 ஆகக் குறைந்துள்ளன. இருப்பினும், நாட்டில் 166 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
தற்போது நாட்டில் மொத்த கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 4.46 கோடியாக உள்ளது. இறப்பு எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்துள்ளது. கோவிட் பாதிக்கப்பட்டவர்களில் இறப்பு எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. அதிலும் அந்த ஐந்து இறப்புகளில் மூன்று பேர் கேரளாவை சேர்ந்தவர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற இரண்டு இறப்புகள் கர்நாடகா மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளன.
மேலும் படிக்க | Covid New Wave: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! கோவிட் அலையால் சீனாவில் லாக்டவுன் அமல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ