இங்க இனிமே mask அணிய வேண்டாமாம்: எங்கனு தெரிஞ்சா ஷாக் ஆவீங்க!!

கொரோனா வைரஸ் உலகெங்கிலும் உள்ள பணக்கார மற்றும் ஏழை நாடுகளில் தொடர்ந்து உயிர்களை பறித்துக்கொண்டிருகிறது. ஆனால், இவை அனைத்தும் தொடங்கிய நாடு வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 21, 2020, 02:16 PM IST
  • கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கியது.
  • COVID-19-ன் நிலை அங்கு மேம்படுவதால் பெய்ஜிங்கில் கட்டுப்பாடுகள் சீராக குறைக்கப்படுகின்றன.
  • கடந்த 13 நாட்களாக பெய்ஜிங்கில் புதிதாக யாரும் வைரசால் பாதிக்கப்படவில்லை.
இங்க இனிமே mask அணிய வேண்டாமாம்: எங்கனு தெரிஞ்சா ஷாக் ஆவீங்க!!  title=

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் வுஹான் (Wuhan) நகரில் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கியது. இந்த தொற்றுநோய் விரைவில் உலகம் முழுவதிலும் பரவியது. ஆகஸ்ட் 21 ஆம் தேதி நிலவரப்படி, உலகெங்கிலும் கிட்டத்தட்ட 8 லட்சம் பேர் இந்த வைரசால் இறந்துவிட்டனர். அதே நேரத்தில் 22 மில்லியனுக்கும் அதிகமான மக்களை இந்த வைரஸ் பாதித்துள்ளது.

இந்த வைரஸ் உலகெங்கிலும் உள்ள பணக்கார மற்றும் ஏழை நாடுகளில் தொடர்ந்து உயிர்களை பறித்துக்கொண்டிருகிறது. ஆனால், இவை அனைத்தும் தொடங்கிய நாடு வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றது.

சில நாட்களுக்கு முன்பு, வுஹானிலிருந்து சில படங்கள் வெளிவந்தன. நோயின் மையப்புள்ளியாக இருந்த இந்த நகரில் கிட்டத்தட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு விட்டன. ஒரு நீச்சல் குளத்தில், மக்கள் முகக்கவசம் கூட அணியாமல், தனி மனித இடைவெளியை பின்பற்றாமல், விருந்து ஒன்றில் கலந்து கொண்டது பற்றி தெரிய வந்தது.

ALSO READ: உலகுக்கு கொரோனாவைக் கொடுத்துவிட்டு, உள்ளூரில் குத்தாட்டமா? Watch Wuhan Party!!

இப்போது, ​​கம்யூனிஸ்ட் நாட்டின் தலைநகரான பெய்ஜிங் (Beijing) அதன் குடிமக்களை முகக்கவ்சங்கள் இல்லாமல் செல்ல அனுமதித்துள்ளது. பெய்ஜிங்கில் உள்ள சுகாதார அதிகாரிகள் குடிமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்போது முகக்கவம் அணிய வேண்டும் என்ற கட்டாய நிபந்தனையை இப்போது நீக்கியுள்ளனர்.

COVID-19-ன் நிலை அங்கு மேம்படுவதால் பெய்ஜிங்கில் கட்டுப்பாடுகள் சீராக குறைக்கப்படுகின்றன. கடந்த 13 நாட்களாக பெய்ஜிங்கில் புதிதாக யாரும் வைரசால் பாதிக்கப்படவில்லை.  

இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான மக்கள் வெளியில் முகக்கவசங்களை அணிந்துகொள்வதாக பெய்ஜிங்கிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெய்ஜிங்கில் மக்கள் முகக்கவசங்களை (Face Mask) அணிவது பாதுகாப்பாக இருப்பதாக நம்புவதாக ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது. இன்னும் சிலர் சமூக அழுத்தம் காரணமாக தொடர்ந்து முகக்கவாம் அணிவதாகக் குறிப்பிட்டனர்.

முன்னதாக ஏப்ரல் மாதத்தில், பெய்ஜிங், குடிமக்கள் முகக்கவசம் இல்லாமல் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதித்தது. ஆனால் அந்த முடிவு பின்னர் மாற்றப்பட்டது. COVID-19-க்கான இரண்டு சுற்று லாக்டௌன்கள் பெய்ஜிங்கில் விதிக்கப்பட்டன. இது தொற்று குறைய வெகுவாக உதவியது.

ஏப்ரல் பிற்பகுதியில், பெய்ஜிங்கின் நோய் கட்டுப்பாட்டுக்கான நகராட்சி மையங்கள், மக்கள் முகக்கவசம் இல்லாமல் வெளியே செல்ல அனுமதித்தன. ஆனால், நகரின் தெற்கில் ஒரு பெரிய மொத்த சந்தையில் கொரோனா வைரஸ் தொற்று புதிதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து ஜூன் மாதத்தில் தளர்வு மாற்றப்பட்டது.

சீனாவில் (China) , கடந்த ஐந்து நாட்களாக, யாரும் புதிதாக ரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் வுஹானில் தொற்று தொடங்கியதிலிருந்து, சீனாவில் இதுவரை மொத்தம் 84,917 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சீன அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ALSO READ: ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துவதும் ஆதரிப்பதும் முக்கியம்: சீனா

Trending News