உலகம் முழுவதும் குரங்கு அம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 பேருக்கு குரங்கு அம்மை காய்ச்சல் நோய் பாதித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு WHO தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கு குரங்கு அம்மை நோய் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த குரங்கு காய்ச்சலால் ஓரினச்சேர்க்கையாளர்கள், இரு பாலின சேர்க்கையாளர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் என கனடா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளின் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின், உலக தொற்று அபாய தயார்நிலை குழுவின் இயக்குனர் சில்வி பிரையன்ட் கூறுகையில். “மக்கள் கவலைப்படும் அளவுக்கு குரங்கம்மை வேகமாக பரவும் நோயல்ல என்றாலும், மெதுவாக இது சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இதனை கட்டுப்படுத்த தயாராக, உலக நாடுகள் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசியும், முறையான சிகிச்சையும் தான் இதற்கு ஒரே தீர்வு. பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து, தனிமைப்படுத்துவதே, இதன் தொற்று பரவலை தடுப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கையாகும்” எனக் கூறினார்.
உலக சுகாதார அமைப்பின் அதிகாரி மேலும் கூறுகையில், குரங்கு காய்ச்சலை எளிதாகக் கட்டுப்படுத்த நாடுகள் சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மற்றும் அவற்றின் தடுப்பூசி கையிருப்பு பற்றிய தரவுகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் படிக்க | Monkeypox: உலகை அச்சுறுத்தும் குரங்கு காய்ச்சல்; அறிகுறிகளும் தடுக்கும் முறைகளும்
இந்நிலையில், குழந்தைகளுக்கு இந்த அம்மை நோய் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) எச்சரித்துள்ளது. பல நாடுகளில் குரங்கு காய்ச்சல் முன்னெப்போதும் இல்லாத அளிவில் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் இதுவரை எந்த தொற்று பாதிப்பும் பதிவாகவில்லை என்று. ஒரு ஐசிஎம்ஆர் மருத்துவ அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் தொற்று இல்லாத நாடுகளில் அதிகரித்து வரும் நோய்த்தொற்றுகளைக் கருத்தில் கொண்டு இந்தியா, அதனி சமாளிக்க தயாராக உள்ளது என்றார்.
ஐசிஎம்ஆர் மருத்துவ அபர்ணா முகர்ஜி, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், குழந்தைகள் குரங்கு காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பெரியம்மை தடுப்பூசி வயதானவர்களுகும் தடுப்பூசி போடப்படும். 1980 களுக்குப் பிறகு, பெரியம்மை தடுப்பூசியைப் பெறாதவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பெரியம்மைக்கான தருப்பூசி பெறாத இளம் வயதினர் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றார்.
எனினும், மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், குரங்கு காய்ச்சல் வந்தவர்களுடன் நெருக்கான தொடர்பில் வாருபவார்களுக்கு இது பரவுகிறது என்றும் அவர் கூறினார். "இந்த நோயைப் பற்றி மக்கள் பீதி அடைய வேண்டாம்; அதன் அறிகுறிகள் பொதுவாக மிக நெருங்கிய தொடர்பு ஏற்படுவதன் மூலம் பரவுகிறது. அதற்கான வழிகாட்டுதல்களை ஏற்கனவே ICMR வெளியிடப்பட்டுள்ளது" என்று ICMR மருத்துவ அதிகாரி கூறினார்.
ICMR மருத்து அதிகாரி பட்டியலிட்டுள்ள அசாதாரணமான குரங்கு அம்மை நோய் அறிகுறிகள்:
உடல் வலிதடிப்புகள்
அதிக காய்ச்சல்
அதிக அளவிலான நிணநீர் அழற்சி
மேலும் படிக்க | Health Alert: அளவுக்கு மிஞ்சிய ஆலுவேரா ஏற்படுத்தும் பாதிப்புகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR