மீண்டும் மீளும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி! அடி சறுக்கும் ரியல் எஸ்டேட் துறையில் மேலும் தளர்ச்சி!

Economic Crisis and Real Estate of china : சீனாவின் ரியல் எஸ்டேட் வீழ்ச்சியடைந்து வருவதால், அந்நாட்டின் இறக்குமதி-ஏற்றுமதி, உற்பத்தி மற்றும் வங்கித் துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 18, 2024, 04:01 PM IST
  • அதல பாதாளத்தில் இருந்து மீண்டு வரும் சீனா!
  • படு பாதாளத்தில் ரியல் எஸ்டேட் துறை
  • கோவிட் பெருந்தொற்றுக்கு பின் தள்ளாடும் சீனா
மீண்டும் மீளும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி! அடி சறுக்கும் ரியல் எஸ்டேட் துறையில் மேலும் தளர்ச்சி! title=

பொருளாதார நெருக்கடியில் இருந்து சீனா மீண்டு வந்தாலும், அதன் ரியல் எஸ்டேட் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது என்ற அறிக்கை அந்நாட்டு மக்களுக்கு கவலையை கொடுக்கும் என்றால், அமெரிக்காவிற்கு இனிப்பானதாக இருக்கலாம். சீனாவின் பொருளாதார நெருக்கடி என்பது கோவிட் பாதித்த பிறகு தொடங்கியது. பொருளாதாரத்தை தலைகீழாக புரட்டிப்போட்ட கொரோனா என்ற வைரஸ், சீனபொருளாதாரத்தின் வலுவான தூணாக விளங்கும் ரியல் எஸ்டேட் துறையை அரித்துவிட்டது. 

சீனாவின் ரியல் எஸ்டேட் வீழ்ச்சியடைந்து வருவதால், அந்நாட்டின் இறக்குமதி-ஏற்றுமதி, உற்பத்தி மற்றும் வங்கித் துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 
 
சீனா பொருளாதார நெருக்கடி
சீனாவில் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் வயதான மக்கள் தொகை ஆகியவை அந்நாட்டின் பொருளாதாரத்தை பாதித்துள்ளது. வர்த்தகத்தில் சீன அரசின் தலையீடு அதிகரித்து வருவதால், வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவுடன் வர்த்தகம் செய்ய தயங்குகின்றன.

அத்துடன், பங்குச் சந்தை வீழ்ச்சியால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சீனாவில் இருந்து பணம் எடுக்கத் தொடங்கினர். 
இதுபோன்ற பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் சீன அரசின் தொடர் முயற்சியால் சீனாவின் பொருளாதாரம் மீண்டும் முன்னேற்றம் அடையத் தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க | நிலவில் அணு உலையை நிறுவ திட்டமிடும் ரஷ்யா சீனா..!!

சீனாவின் பொருளாதாரம்
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தி மிக்க நாடாக திகழும் சீனாவில் தற்போது மந்தமான வளர்ச்சி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் குறைவது, ரியல் எஸ்டேட் துறையின் வீழ்ச்சி என்று பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை சீனா சந்தித்து வருகிறது.

சீனாவின் மிகப்பெரிய தொழிலதிபரான எவர்கிராண்டே ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைவர், காவல் துறை கண்காணிப்பில் இருக்கிறார் என்பதும், அவருடைய நிறுவனம்  பங்குச் சந்தையில் இருந்து இந்நிறுவனம் தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீனாவின் முயற்சிகள்

2024 புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே சீனாவின் உற்பத்தி மற்றும் முதலீடு மேம்பட்டிருந்தாலும், ரியல் எஸ்டேட் துறையில் இன்னும் சுணக்கம் காணப்படுகிறது. சீனாவின் தேசிய புள்ளியியல் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ரியல் எஸ்டேட் துறையில் இன்னும் வளர்ச்சி ஏற்படவில்லை என்ற தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள்! இந்த விஷயங்களில் கவனம் தேவை!

கடந்த இரண்டு மாதங்களில் தொழில்துறை உற்பத்தி ஆண்டு அடிப்படையில் ஏழு சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இது ஆய்வாளர்களின் மதிப்பீட்டை விட அதிகமாக இருப்பதாகவும் அறிக்கை கூறுகிறது. இந்த காலகட்டத்தில், தொழிற்சாலைகள் மற்றும் உபகரணங்களுக்கான செலவு 4.2 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் ரியல் எஸ்டேட் துறை ஒன்பது சதவீதம் குறைந்துள்ளது. இருந்தபோதிலும்,  இந்த மாத தொடக்கத்தில் சீனாவின் வருடாந்திர சட்டமன்றக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட கொள்கைகள் நிலையான மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் சீனா நம்புகிறது மேலும் ரியல் எஸ்டேட். டெவலப்பர்கள் மிகவும் மலிவு வீடுகளை உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில, மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலான வளர்ச்சிக்கு சீனா காரணமாக இருக்கும் நிலையில்,  சீனாவின் பொருளாதாரம் உத்வேகம் அடைவது நல்ல சகுனம் ஆக இருக்கும். இது, உலகளாவிய வளர்ச்சி வாய்ப்புகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், ரியல் எஸ்டேட் துறையின் தரவுகள் தான் கவலைகளை அதிகரிக்கின்றன.

மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் புடின் 88% வாக்குகளுடன்.. 5வது முறையாக வரலாற்று சிறப்புமிக்க வெற்றி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News