நேபாளத்தின் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்யும் சீனாவின் முயற்சிகளை தடை செய்யவேண்டும் என்று நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி-இடம் அந்நாட்டு சர்வே துறை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. ஆனால், அதை Nepal Prime Minister KP Sharma Oli கண்டு கொள்ளவில்லை என்று அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.
நேபாள-சீன எல்லையில் உள்ள ஏழு மாவட்டங்களின் பல இடங்களில் சீனா சட்டவிரோத நில ஆக்ரமிப்பு செய்துள்ளதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
பெய்ஜிங் நேபாளத்தில் வேகமாக முன்னேறி வருவதாகவும், மேலும் கூடுதலாக பல நிலப்பரப்புகளை ஆக்கிரமித்து, நேபாளத்தின் எல்லையை சுருக்குவதாகவும் இந்திய ஏஜென்சிகள் கூறுவது சர்வதேச அளவில் அதிர்ச்சியை எழுப்பியுள்ளது.. "நேபாளி கம்யூனிஸ்ட் கட்சி (என்சிபி) (Nepali Communist Party (NCP)) சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சிசிபி) (Chinese Communist Party (CCP), நில விரிவாக்க திட்டத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதால் உண்மையான சூழ்நிலை மோசமாக இருக்கக்கூடும்" என்று உளவுத்துறை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
நேபாளத்தின் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்யும் சீனாவின் முயற்சிகளை தடை செய்யவேண்டும் என்று நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி-இடம் அந்நாட்டு சர்வே துறை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. ஆனால், அதை Nepal Prime Minister KP Sharma Oli கண்டு கொள்ளவில்லை என்று அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.
சீனாவின் நில அபகரிப்பு திட்டத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் டோலாகா, கோர்கா, தர்ச்சுலா, ஹம்லா, சிந்துபால்ச ow க், சங்குவாசபா மற்றும் ரசுவா ஆகியவை அடங்கும்.
முன்னதாக கோர்லாங்கின் உச்சியில் அமைந்திருந்த டோலாகாவில் உள்ள கோர்லாங் (Korlang ) பகுதியில் உள்ள எல்லை தூண் எண் 57 ஐ தள்ளி வைத்தது உட்பட அந்தப் பகுதியில் சர்வதேச எல்லையை 1,500 மீட்டர் ஆக்ரமித்து தன்வசமாக்கியுள்ளது சீனா.
டோலாகாவைப் போலவே, கோர்கா மாவட்டத்தில் எல்லை தூண் எண்கள் 35, 37 மற்றும் 38 ஆகியவற்றையும், சோலுகும்புவின் நம்பா பன்ஜியாங்கில் எல்லை தூண் எண் 62ஐயும் சீனா இடம் மாற்றியுள்ளது.
முதல் மூன்று தூண்கள் ருய் (Rui) கிராமத்திலும் டாம் (Tom ) ஆற்றின் பகுதிகளிலும் அமைந்திருந்தன.
நேபாளத்தின் உத்தியோகபூர்வ வரைபடம் இந்த கிராமத்தை நேபாளத்தின் ஒரு பகுதியாகக் காட்டுகிறது. இந்த கிராமத்தின் குடிமக்கள் நேபாள அரசாங்கத்திற்கு வரி செலுத்தி வருகின்றனர். ஆனால், சீனா இப்பகுதியை ஆக்கிரமித்து 2017 ஆம் ஆண்டில் சீனாவின் திபெத் தன்னாட்சி பிராந்தியத்துடன் இணைத்தது.
நேபாளத்தின் ஒரு பகுதியாக இருந்த பல வீடுகள் இப்போது சீனாவால் கையகப்படுத்தப்பட்டு சீன எல்லைக்குள் இணைக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் சீனாவால் நில அபகரிப்பு செய்யப்பட்டது தொடர்பான பல வழக்குகளை நேபாள வேளாண் அமைச்சகம் எடுத்துக்காட்டுகிறது.
நேபாளத்தின் 4 மாவட்டங்களின் கீழ் வரும் குறைந்தது 11 இடங்களில் சீனா, நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக நேபாள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மாவட்டங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பெரும்பாலான பகுதிகள் ஹம்லாவில் பக்தரே நதி, கர்னாலி நதி, சஞ்சென் நதி மற்றும் ரசுவாவில் உள்ள லெம்டே நதி உள்ளிட்ட நதிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் ஆகும். இவற்றைத் தவிர, சிந்துபால்கோக்கில் புர்ஜுக் நதி, கரேன் நதி, மற்றும் ஜம்பு நதி, போடெகோஷி நதி மற்றும் சங்குவாசபாவில் சாம்ஜுக் நதி; கம்கோலா நதி மற்றும் அருண் நதியும் ஆக்ரமிக்கப்பட்டுள்ளன.
2005 ஆம் ஆண்டு முதல் சீனாவுடனான எல்லைப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் இருந்து நேபாளம் பின்வாங்கிவிட்டதாக இந்திய புலனாய்வு அமைப்புகளின் வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR