கனடாவில் திடீரென மூடப்பட்ட 3 கல்லூரிகள்; பரிதவிக்கும் இந்திய மாணவர்கள்!

மாணவர்களுக்கு எழுந்துள்ள பெரும் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம்  பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆலோசனையை வழங்கியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 20, 2022, 10:54 AM IST
  • கனடாவில் நீதி கேட்டு இந்திய மாணவர்கள் போராட்டம்
  • கனடாவின் கியூபெக்கில் 3 கல்லூரிகள் திடீரென திவாலானதாக அறிவிக்கப்பட்டது
  • ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
கனடாவில்  திடீரென மூடப்பட்ட 3 கல்லூரிகள்; பரிதவிக்கும் இந்திய மாணவர்கள்! title=

கனடாவின் கியூபெக்கில் மூன்று கல்லூரிகள் திடீரென திவாலானதாக அறிவித்ததையடுத்து, ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. மாணவர்களுக்கு எழுந்துள்ள பெரும் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம்  பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆலோசனையை வழங்கியுள்ளது. லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து கல்வி கற்கச் சென்ற இந்த இந்திய மாணவர்கள் தற்போது  செய்வதறியாது திகைத்து போயுள்ளனர்.

கனடாவில் உள்ள M College Montreal, CDE College Sherbrooke மற்றும் CCSQ College Longueil ஆகிய மூன்று கல்லூரிகளும் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளன. முன்னதாக, இந்தக் கல்லூரிகள் முதலில் கல்விக் கட்டணத்தைச் விரைவாக செலுத்துமாறு  மாணவர்களுக்கு அழுத்தம் கொடுத்தன. பின்னர் திடீரென்று இந்த மாதம் கல்லூரியை மூடுவதாக மாணவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. கனடாவின் சிபிஎஸ் செய்தி நிறுவனம் மூன்று கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை பணியை மேற்கொள்ளும் நிறுவனம் ஒன்றுதான் என்றும், அதன் பெயர் ரைசிங் பீனிக்ஸ் இன்டர்நேஷனல் என்றும் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க | கனடாவில் நீடிக்கும் பதற்றம்; போராட்டத்தை ஒடுக்க கை கோர்க்கும் கனடா - அமெரிக்கா!

தற்போது இந்த நிறுவனம் திவால் மனு தாக்கல் செய்துள்ளது. கியூபெக்கில் உள்ள பல தனியார் கல்லூரிகளுக்கு எதிராக விசாரணைகள் தொடங்கப்பட்ட நேரத்தில் இந்தக் கல்லூரிகளின் திவால் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் எம் கல்லூரி மற்றும் சிடிஇ கல்லூரி ஆகியவை அடங்கும். இந்திய மாணவர்களைச் சேர்க்கப்பட்ட விதம் கேள்விக்குள்ளாகியுள்ளது. கனடாவின் கியூபெக்கில் நீதி கேட்டு இந்திய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கல்லூரிகள் திடீரென மூடப்பட்டதால், இந்திய மாணவர்கள் உதவி கோரி இந்திய தூதரகத்தையும் அணுகியுள்ளனர். 

திவாலாக அறிவிக்கப்பட்ட கல்லூரிகளில் இந்திய மாணவர்களில் பலர் ஆயிரக்கணக்கான டாலர்களை டெபாசிட் செய்திருந்தனர். மாணவர்களின் படிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் செய்வதறியாது திகைத்து போயுள்ளனர். இந்திய தூதரக தனது அறிக்கையில், 'இந்த மூன்று கல்லூரிகளிலும் படிக்கும் பல இந்திய மாணவர்கள் தூதரகத்தை அணுகினர். கட்டணத்தைத் திரும்பப் பெறுவதில் மாணவர்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அவர்கள் கியூபெக் அரசாங்கத்தின் உயர்கல்வி அமைச்சகத்திடம் புகார் செய்யலாம். கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கு பல வழிகள் உள்ளன என்று  இந்திய தூதரகம் உறுதியளித்த்துள்ளது.

மேலும்  படிக்க | கனடாவில் அதிகரிக்கும் பதற்றம்: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் தலைமறைவு?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News