Breaking: நேபாளத்தில் 4 இந்தியர்கள் உட்பட 22 பயணம் செய்த விமானம் மாயம்

நேபாளத்தில் தனியார் ஏர்லைன்ஸ் மூலம் இயக்கப்படும் விமானம் ஞாயிற்றுக்கிழமை, 22 பேருடன் காணாமல் போனதாக விமான நிறுவனம் மற்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 29, 2022, 12:34 PM IST
Breaking: நேபாளத்தில் 4 இந்தியர்கள் உட்பட 22 பயணம் செய்த விமானம் மாயம் title=

நேபாளத்தில் தனியார் ஏர்லைன்ஸ் மூலம் இயக்கப்படும் விமானம் ஞாயிற்றுக்கிழமை, 22 பேருடன் காணாமல் போனதாக விமான நிறுவனம் மற்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. சிறிய விமானம் காத்மாண்டுவில் இருந்து வடமேற்கே 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொக்காரா என்ற  இடத்திலிருந்து வடமேற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜோம்சோம் நகருக்கு சென்று கொண்டிருந்தது. கனடாவில் கட்டமைக்கப்பட்ட ட்வின் ஓட்டர் விமானங்களை இயக்கும் தாரா ஏர் (Tara Air), அதை இயக்குகிறது.

"விமானம் முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள ஜோம்சோம் வானத்தில் காணப்பட்டது, அதன் பின்னர் அது தொடர்பில் இல்லை" என்று ANI இடம் தாரா ஏர்  நிறுவன தலைமை அதிகாரி நேத்ரா பிரசாத் சர்மா தெரிவித்தார்.

விமானத்தில் 4 இந்தியர்கள் மற்றும் 3 ஜப்பானியர்கள் இருந்தனர். மீதமுள்ள நேபாளி குடிமக்கள் மற்றும் விமானத்தில் பணியாளர்கள் உட்பட மொத்தம் 22 பயணிகள் இருந்ததாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | எஸ்.ஜே. சூர்யா-வுக்கு இந்த கோடிகள் வரி பாக்கியா ? எச்சரித்த நீதிமன்றம்!

இமயமலை தேசமான நேபாளத்தின் ஐந்தாவது பெரிய மாவட்டமான முக்திநாத் கோயிலுக்கான யாத்திரையில், மலைப்பகுதியான முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள லெட்டின் "திட்டி" பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டில், தாரா ஏர் மூலம் இயக்கப்படும் ட்வின் ஓட்டர் டர்போபிராப் விமானம் மியாக்டியின் மேற்கு மாவட்டத்தில் விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்தனர். மூன்று பணியாளர்களைத் தவிர, ஒரு சீனர் மற்றும் ஒரு குவைத் நாட்டவர் உட்பட 20 பயணிகள் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்தனர்.

மலையின் தாயகமான நேபாளத்தில்,  உள்நாட்டு விமான விபத்துக்கள் அடிக்கடி பதிவாகிகின்றன. திடீரென் மாறக்கூடிய வானிலை மற்றும் கடினமான மலைப் பகுதிகளில் உள்ல விமான ஓடுதளங்கள் காரணமாக, விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன.

மேலும் படிக்க | தாகத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்று நாடகமாடிய பெண் - காதலனுடன் சிக்கியது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

"திட்டி பகுதியின் உள்ளூர்வாசிகள் அசாதாரண சத்தம் கேட்டதாக எங்களுக்குத் தெரிவித்தனர். நாங்கள் தேடுதல் நடவடிக்கைக்காக ஹெலிகாப்டரை அப்பகுதிக்கு அனுப்புகிறோம்," என்று முஸ்டாங்கின் மாவட்ட காவல்துறை அலுவலகத்தின் டிஎஸ்பி ராம் குமார் டானி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். .

உலகின் மிக உயரமான மலையின் தாயகமான நேபாளத்தில்,  உள்நாட்டு விமான வலையமைப்பில் விபத்துக்கள் அடிக்கடி பதிவாகிகின்றன. மாற்றக்கூடிய வானிலை மற்றும் கடினமான மலைப் பகுதிகளில் விமான ஓடுதளங்கள் இருப்பதால், விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன.

Trending News