அமெரிக்க முன்னால் அதிபர் ஒபமாவின் ட்வீட் மக்களிடையே வரலாறு காணாத வரவேற்ப்பு பெற்றுள்ளது.
1861-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்கா விர்ஜினியா மாநிலத்தில் அடிமைகள் சார்புப் படையை வழிநடத்திச் சென்ற ராபர்ட் இ லீ-ன் சிலையினை அகற்றப்பட இருபதாக வெளிவந்த தகவலை அடுத்து கடந்த வாரம் சார்லொட்டஸ்வில்லி நகரில் மக்கள் பேரணி நடத்தினர்.
இந்த பேரணியின் பொது கார் ஒன்று மக்கள் கூட்டத்தில் மோதியதில் 3 பேர் உயிரழந்தனர். விபத்தில் இறந்தவர்களுக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் ஒபாமா தனது ட்விட்டர் பக்கத்தில் "நிறம், மதத்தைக் காரணம் காட்டி மற்றவரை வெறுப்பதற்காக யாரும் பிறக்கவில்லை" என பதிவிட்டிருந்தார்
"No one is born hating another person because of the color of his skin or his background or his religion..." pic.twitter.com/InZ58zkoAm
— Barack Obama (@BarackObama) August 13, 2017
இணையத்தில் இந்த ட்விட் பேரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் 12 லட்சம் பேர் ரிடுவீட் செய்துள்ளனர்.