Sheikh Hasina, Waker Uz Zaman News Tamil : வங்கதேசத்தின் பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனாவை விரட்டியது வேறு யாருமல்ல, அவருடைய உறவினரும் ராணுவ தலைமை தளபதியுமான வாக்கர் உஸ் ஜமான் தான். வங்கேதசத்தில் இட ஒதுக்கீடுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் தீவிரமடைந்ததால் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இப்போது அந்நாட்டை விட்டு வெளியேறினார். அவர் நேற்று அந்நாட்டை விட்டு வெளியேற வெறும் 45 நிமிடங்கள் கெடு மட்டுமே ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான் கொடுத்தார் என்ற அதிர்ச்சி தகவல் இப்போது வெளியாகியுள்ளது. அதற்குள் வெளிநாடு ஒன்றுக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டும், இல்லையென்றால் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஷேக் ஹசீனாவின் உறவினர்
அதனால் தான் ஷேக் ஹசீனா அவசர அவசரமாக வங்கதேசம் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இன்று காலை வெளிநாடு ஒன்றுக்கும் அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிய வங்கதேச ராணுவ தலைமை தளபதி வேறு யாருமல்ல, ஷேக் ஹசீனாவின் உறவினர் என்பது தான் அதிர்ச்சி தகவல். ஆம், வங்கதேச ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான், ஷேக் ஹசீனாவின் மாமா முகமது முஸ்தாபிசூர் ரகுமானின் மகளை மணந்திருக்கிறார். நெருங்கிய உறவினர் என்பதாலேயே ஷேக் ஹசீனா இவரை ராணுவ தலைமை தளபதியாக நியமித்திருக்கிறார். ஆனால் அவரே நாட்டில் நிலவும் குழப்பங்களுக்கு காரணமாகி இப்போது ஷேக் ஹசீனாவை ஆட்சியில் இருந்தும் வெளியேற்றி இருக்கிறார்.
மேலும் படிக்க | புறப்பட்டார் ஷேக் ஹசீனா... அடுத்தது எங்கே? - உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா!
வாக்கர் உஸ் ஜமான் யார்?
வங்கதேச ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான் 1966 ஆம் ஆண்டு டாக்காவில் பிறந்தவர். லண்டனில் உயர்கல்வி படித்து முடித்திருக்கும் அவர் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி தான் வங்கதேச ராணுவ தலைமை தளபதியாக பதவியேற்றார். இவர் பதவியேற்ற சுமார் 2 மாதங்களுக்குள் நாட்டில் குழப்பம் ஏற்பட்டு, அதனால் 15 ஆண்டுகாலம் வங்கதேசத்தின் பிரதமராகவும் இருந்த ஷேக் ஹசீனா இப்போது பதவியை இழந்து, நாட்டில் இருந்தும் துரத்தியடிக்கப்பட்டிருக்கிறார்.
வாக்கர் உஸ் ஜமான் துரோகியா?
அதனால் ஷேக் ஹசீனா வங்கதேச ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு எதிரானவர்களுடன் கைகோர்த்து தன்னை ஆட்சிக்கட்டிலில் இருந்து இறக்க சதி செய்துவிட்டதாகவும் வாக்கர் உஸ் ஜமான் மீது ஹசீனா தரப்பு குற்றம்சாட்டுகிறது. அதேநேரத்தில், உறவினர் என்பதாலேயே நாட்டில் நிலவும் குழப்பங்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இந்த நடவடிக்கையை அவர் எடுத்திருப்பதாகவும், நிலைமை சீரான பிறகு ஷேக் ஹசீனா மீண்டும் வங்கதேசம் திரும்ப அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ