ஆஸ்திரேலியாவை தாக்கும் ‘எலி’ படைகள்; வானில் இருந்து பொழியும் ‘எலி’ மழை

ஆஸ்திரேலியாவின் மத்திய-மேற்கு  பகுதி முழுவதும் எலிகள் தொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தி வருவதால், விவசாயிகள் அரசாங்கத்திடம் உதவி கோருகின்றனர். லட்சக்கணக்கான எலிகள், வீடுகள் மற்றும் பண்ணைகள் மீது படையெடுத்து வருகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 15, 2021, 02:25 PM IST
  • எலிகள் படையெடுப்பு தொடர்பான படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
  • ஆஸ்திரேலியாவின் மத்திய-மேற்கு பகுதி முழுவதும் எலிகள் பேரழிவை ஏற்படுத்தி வருவதால், விவசாயிகள் அரசாங்கத்திடம் உதவி கோருகின்றனர்.
  • லட்சக்கணக்கான எலிகள், வீடுகள் மற்றும் பண்ணைகள் மீது படையெடுத்து வருகின்றன
ஆஸ்திரேலியாவை தாக்கும் ‘எலி’ படைகள்;  வானில் இருந்து பொழியும் ‘எலி’ மழை title=

ஆஸ்திரேலிய விவசாயிகளும், விவசாயம் சார்ந்த தொழில் துறையினரும் இது வரை இல்லாத அளவில், எலி படைகளின் தாக்குதலால் நிலை குலைந்து போயுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில், சமீபத்திய மாதங்களில், லட்சக்கணக்கான எலிகள் பயிர்களுக்கு பெரும் அழிவை ஏற்படுத்தி வருகின்றன. கிழக்கு ஆஸ்திரேலியாவில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தானியங்கள் அனைத்தும், எலிகளுக்கு இரையாகி, இப்போது அனைத்தும் வீணாகி விட்டன. சேமிப்பு கிடங்ககுகளில் மட்டுமல்லாது ஊரக பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளிலும் எலிகள படையெடுத்து நோயாளிகளை கடித்து வருகிறது.  

ஆஸ்த்ரேலிய விவசாயிகள் இது வரை இல்லாத அளவில் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதாகவும், எலிகளின் படையெடுப்பு மிகவும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது எனவும் கூறுகின்றனர்.

எலிகள் படையெடுப்பு தொடர்பான  படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

ஆஸ்திரேலியாவின் மத்திய-மேற்கு  பகுதி முழுவதும் எலிகள் தொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தி வருவதால், விவசாயிகள் அரசாங்கத்திடம் உதவி கோருகின்றனர். லட்சக்கணக்கான எலிகள், வீடுகள் மற்றும் பண்ணைகள் மீது படையெடுத்து வருகின்றன.

ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் லூசி தாக்ரே ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார், இது ஆஸ்திரேலிய மாநிலமான நியூ சவுத் வேல்ஸில் இறந்த மற்றும் உயிருள்ள எலிகள் தரையில்  கொட்டப்படவதைக் காணலாம்.

"எங்கள் வீடுகளின் அனைத்து பகுதிகளையும் ஆக்கிரமித்துள்ள எலிகள், எங்கள் உடைகளையும், உணவையும் அழித்து விட்டது. அதோடு நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.  அரசு இதற்காக ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் கூறுகிறார்

ALSO READ | Jerusalem: மூன்று மதங்களின் புனித இடமாக திகழும் ஜெருசலத்தின் சுவாரஸ்ய வரலாறு

இதற்கிடையில், சமூக ஊடகங்களில் இன்னும் பல வீடியோக்கள் வெளிவந்துள்ளன, அதை பார்த்து மக்கள் திகிலடைந்தனர்.

நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் எலிகள் பிரச்சினையை சமாளிக்க 50 மில்லியன் டாலர் (39 மில்லியன் டாலர்) நிதியுதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது வரை இல்லாத அளவிற்கு உள்ள எலிகளின் படையெடுப்பிலிருந்து தங்கள் பயிர்களைப் பாதுகாக்க போராடும் விவசாயிகளுக்கு இது உதவும்.

ALSO READ | ஹமாஸ் ஏவிய ராக்கெடுக்களில் இருந்து இஸ்ரேலை பாதுகாத்த Iron Dome

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News