ஆஸ்திரேலியாவை ஆட்டி படைக்கும் முயல்; ஆண்டுக்கு ரூ.1600 கோடி இழப்பு!

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவிற்குள் நுழைந்த எதிரியினால், கடந்த பத்தாண்டுகளாக அந்நாடு பெரும் சவாலை சந்தித்து வருகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 28, 2022, 06:58 PM IST
  • 1859 ஆண்டில் கிடைத்த கிறிஸ்துமஸ் பரிசு.
  • முயல்கள் ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்டவை அல்ல.
  • வேகமாக அதிகரிக்கும் முயல்களின் எண்ணிக்கை.
ஆஸ்திரேலியாவை ஆட்டி படைக்கும் முயல்; ஆண்டுக்கு ரூ.1600 கோடி இழப்பு! title=

கடந்த பத்தாண்டுகளாக ஆஸ்திரேலியா ஒரு பெரிய சவாலை எதிர்கொள்கிறது. இந்த சவாலை, வேறொரு நாடோ அல்லது அமைப்போ கொடுக்கவில்லை. அதன் மிகப்பெரிய 'எதிரி' பெரும் சாவாலை கொடுத்து வருகிறது. இந்த 'எதிரி' சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு  ஆஸ்திரேலியாவிற்குள் நுழைந்தது. அப்போது அதன் எண்ணிக்கை 24 மட்டுமே. படிப்படியாக அதிகரித்த அதன் எண்ணிக்கை இன்று 150 ஆண்டுகளுக்குப் பிறகு  200 மில்லியனைத் தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம். இந்த எதிரிகள் ஆஸ்திரேலியாவுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.1,600 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அப்படி இந்த நாட்டிற்கு இப்படி கேடு விளைவிப்பவர் யார் என்று இப்போது நீங்கள் நினைத்திருக்க கூடும். அது வேறு யாருமல்ல. முயல். ஆம், அப்பாவியாகத் தோற்றமளிக்கும் இந்த சிறிய விலங்கு, இந்த நாட்டின் பிரச்சனையை அதிகரித்துள்ளது. நிச்சயமாக நீங்கள் இன்னும் நம்ப முடியாது, ஆனால் புள்ளிவிவரங்கள் அவ்வாறு கூறுகின்றன. 

 ரூ.1600 கோடி இழப்பு

இன்று ஆஸ்திரேலியாவில், ஐரோப்பிய இனத்தை சேர்ந்த காட்டு முயல்கள் மேய்ச்சல் நிலங்களையும் பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றன. இதுமட்டுமின்றி, இதனால் நிலத்தின் உற்பத்தியும் குறைந்து வருகிறது. இது தவிர, அவை மற்ற உள்நாட்டு வனவிலங்குகளையும் தாக்கி அழிக்கிறது. இந்த ஆக்கிரமிப்பு வகை முயல்கள் சுமார் 300 வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளன.  இவற்றால், ஆஸ்திரேலியா விவசாயத் துறையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200 மில்லியன் டாலர் அல்லது சுமார் ரூ.1600 கோடி இழப்பை சந்திக்கிறது.

1859 ஆண்டில் கிடைத்த கிறிஸ்துமஸ் பரிசு

பயிர்கள், தாவரங்கள் மற்றும் பிற விலங்குகளை சேதப்படுத்தும் இந்த முயல்களின் எண்ணிக்கை 200 மில்லியனுக்கும் அதிகமாகும். இவை அவுஸ்திரேலியாவுக்கு பெரும் பிரச்சனையாக மாறி வருகின்றன. இந்த முயல்கள் ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்டவை அல்ல. அவை வெளிநாட்டில் இருந்த வந்த இனங்கள் பிரிவை சேர்ந்தது.  இந்த முயல் ஆஸ்திரேலியா சென்ற கதையும் சுவாரஸ்யமானது.  டிசம்பர் 25, 1859 அன்று, கிறிஸ்மஸ் அன்று, மெல்போர்ன் துறைமுகத்திற்கு வந்த இங்கிலாந்து கப்பலில் ஒரு நபருக்கு ஒரு சிறப்பு பரிசு வந்தது.  தாமஸ் ஆஸ்டின் என்ற நபருக்கு, இங்கிலாந்தில் இருந்துகிறிஸ்துமஸ் பரிசாக 24 முயல்கள் வந்தன. முதலில், இங்கிலாந்தில் உள்ள ஆஸ்டின் ஆஸ்திரேலியாவில் உள்ள தனது வீட்டின் வளாகத்தில் பல முயல்களை வளர்க்க விரும்பினார், எனவே அவர் அவற்றை இங்கிலாந்திலிருந்து வரவழைக்க எண்ணியிருந்தார். இந்த 24 முயல்களில் சில காட்டு மற்றும் சில வளர்ப்பு முயல்கள். இந்த 24 முயல்களிலிருந்து மூன்றே ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான முயல்களாக பெருகின.

மேலும் படிக்க | Viral News: தன்னை கடித்த பாம்பை கடித்து குதறிய 2 வயது சிறுமி!

வேகமாக அதிகரிக்கும்  முயல்களின் எண்ணிக்கை

இங்கிலாந்தில் இருந்து ஆஸ்டினுக்கு அனுப்பப்பட்ட முயல்கள் மெல்போர்னை அடைய 80 நாட்கள் ஆனதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கப்பலில் உள்ள காட்டு மற்றும் வளர்ப்பு முயல்களுக்கு இடையில் இனப்பெருக்கம் நடந்துள்ளது. எனவே, இந்த முயல்களின் எண்ணிக்கை  நமப முடியாத அளவிற்கு பெருகி விட்டது. 

மேலும் படிக்க | பிரதமரின் கடமைகளை செய்யத் தேவையில்லை: தாய்லாந்து பிரதமரை சஸ்பெண்ட் செய்த நீதிமன்றம்

மேலும் படிக்க | புகைப்படத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரதமர் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News