ஈரான் தளபதி இறுதிச் சடங்கு கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் பலி!

அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரான் ராணுவ தளபதி இறுதி சடங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்தனர் மேலும் 48 பேர் காயமடைந்தனர்.

Last Updated : Jan 7, 2020, 06:02 PM IST
ஈரான் தளபதி இறுதிச் சடங்கு கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் பலி! title=

அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரான் ராணுவ தளபதி இறுதி சடங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்தனர் மேலும் 48 பேர் காயமடைந்தனர்.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் நாட்டு ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதையடுத்து காசிம் சுலைமானியின் உடல் ஈராக்கில் இருந்து ஈரானுக்கு கொண்டுவரப்பட்டது.

சுலைமானியின் சொந்த ஊரான கெர்மான் நகரில் நேற்று இறுதி சடங்குகள் நடந்தன. இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு லட்சக்கணக்கான மக்கள் அந்த பகுதியில் குவிந்தனர். மக்கள் தங்கள் கைகளில் கறுப்பு மற்றும் ஈரான் நாட்டு கொடிகளை ஏந்தியபடி அமெரிக்காவுக்கு எதிராக கோ‌‌ஷங்களை எழுப்பி பேரணியாகச் சென்றனர்.

இந்த இறுதி இறுதிச்சடங்கு மற்றும் இறுதி ஊர்வலத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டதால் பல்வேறு இடங்களில் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்ததாகவும், 48 பேர் காயமடைந்தனர்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News