உக்ரைன் அணுமின் நிலைய தாக்குதலுக்கு பதிலளித்த அமெரிக்கா: அடுத்த கட்டம் ஆரம்பமா?

Russia-Ukraine Crisis: ரஷ்யா உக்ரைன் இடையிலான விவகாரம் நாளுக்கு நாள் புதிய பரிமாணங்களை எடுத்து வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 4, 2022, 06:24 PM IST
  • பெரிதாகும் ரஷ்யா உக்ரைன் விவகாரம்.
  • உக்ரைன் அணுமின் நிலையத்தை தாக்கியது ரஷ்யா.
  • அமெரிக்க எரிசக்தி துறை அதன் நியூக்லியர் இன்சிடண்ட் ரெஸ்பான்ஸ் குழுவைச் செயல்படுத்தியுள்ளது: அமெரிக்கா.
உக்ரைன் அணுமின் நிலைய தாக்குதலுக்கு பதிலளித்த அமெரிக்கா: அடுத்த கட்டம் ஆரம்பமா? title=

புதுடெல்லி: ரஷ்யா உக்ரைன் இடையிலான விவகாரம் நாளுக்கு நாள் புதிய பரிமாணங்களை எடுத்து வருகின்றது. பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கும் நிலையிலும், உக்ரைனிய ராணுவ தளங்கள் மீதான தாக்குதலை நிறுத்த தயாராக இல்லை என ரஷ்யா திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

இதற்கிடையில், பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அணுஆயுதப் போராக இது மாறிவிடக்கூடாது என்ற அச்சமும் மேலோங்கி உள்ளது. 

உக்ரைனின் சபோரிஜியா அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்க எரிசக்தி துறை தனது ‘நியூக்லியர் இன்சிடண்ட் ரெஸ்பான்ஸ் குழு’ வை செயல்படுத்தி நிலைமையை கண்காணித்து வருவதாக அமெரிக்க எரிசக்தி செயலாளர் ஜெனிபர் கிரான்ஹோம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட தொடர்ச்சியான ட்வீட்களில், கிரான்ஹோல்ம், "நான் உக்ரைனின் எரிசக்தி அமைச்சருடன் ஜாபோரிஜிசியா அணுமின் நிலையத்தின் நிலைமை பற்றி பேசினேன். அணுமின் ஆலைக்கு அருகில் நடத்தப்பட்ட ரஷ்ய இராணுவ நடவடிக்கைகள் பொறுப்பற்றவை. இவை நிறுத்தப்பட வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

“எரிசக்தி துறை அதன் நியூக்லியர் இன்சிடண்ட் ரெஸ்பான்ஸ் குழுவைச் செயல்படுத்தியுள்ளது. பாதுகாப்புத் துறை, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் வெள்ளை மாளிகையுடன் கலந்தாலோசித்து நிகழ்வுகளைக் கண்காணித்து வருகிறது. அணுமின் ஆலைக்கு அருகில் உயர்ந்த கதிர்வீச்சு அளவீடுகள் இருப்பதாகத் தெரியவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் படிக்க| உக்ரைன் நெருக்கடி: சபோரிஜியா அணுமின் நிலையத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றின 

ஜாபோரிஜிசியா ஆலையின் உலைகள் "வலுவான கட்டுப்பாட்டு கட்டமைப்புகளால் பாதுகாக்கப்படுகின்றன, உலைகள் பாதுகாப்பாக மூடப்படுகின்றன" என்று கிரான்ஹோல்ம் மேலும் கூறினார். 

முன்னதாக, ரஷ்ய துருப்புக்கள் வளாகத்தின் மீது ஷெல் வீசியதை அடுத்து, உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான, சபோரிசியா அணுமின் நிலையத்தின் மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது தளங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் தீப்பிடித்தது. அங்கிருந்து புகை வெளியேறுவதை அதிகாரிகள் கவனித்ததாக அணுமின் நிலையம் உள்ள எனர்கோடர் நகரின் மேயர் கூறினார். சபோரிஜியா அணுமின் நிலையத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றியதாகவும் தகவல் வெளியாயின. 

இதற்கிடையில், காலை 6.20 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து, ஆசியாவில் பங்குச்சந்தைகளில் பங்கு விலைகள் வீழ்ச்சியடைந்ததாக பிபிசி தெரிவித்துள்ளது.

டோக்கியோ மற்றும் ஹாங்காங் சந்தைகள் செங்குத்தான வீழ்ச்சியை எதிர்கொண்டன. ஜப்பானின் முக்கிய குறியீடான நிக்கேய் குறியீடு 2.5 சதவீதம் குறைந்தது, ஹாங்காங்கில் ஹாங் செங் 2.6 சதவீதம் குறைந்தது. ஆசியாவில் காலை வர்த்தகத்தின் போது எண்ணெய் விலை உயர்ந்தது, பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் $112 க்கு மேல் இருந்தது.

மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் போர்: இந்தியா மாணவர் ஒருவர் துப்பாக்கி சூட்டில் காயம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News