ஆப்கானிஸ்தானை சேர்ந்த அகதிகள் டெல்லியில் போராட்டம்

தலைநகர் டெல்லியில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த அகதிகள் தங்களுக்கு அகதிகள் அட்டை , கல்வி , வேலைவாய்ப்புகளை  பெற்றுத் தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 25, 2021, 11:46 AM IST
ஆப்கானிஸ்தானை சேர்ந்த அகதிகள் டெல்லியில் போராட்டம் title=

டெல்லி : தலைநகர் டெல்லியில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த அகதிகள் தங்களுக்கு அகதிகள் அட்டை , கல்வி , வேலைவாய்ப்புகளை  பெற்றுத் தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் (Afghanistan) ஆட்சி அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றினர். பின்பு அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கானியும் தப்பித்து வேறு நாட்டிற்கு சென்று விட்டார். அதற்குப் பிறகு தாலிபான்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றி ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தாலிபான்கள் முழு கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளதால், ஆப்கானில் வசிக்கும் மக்கள் ஒவ்வொரு நாளும் பெரும் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் மக்கள் உயிர் பிழைப்பதற்காக வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வருவோரின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து வருகிறது.

ALSO READ: ஆப்கானிஸ்தானிலிருந்து டெல்லி வந்தவர்களுக்கு கோவிட் தொற்று: மருத்துவமனையில் அனுமதி 

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையர் அலுவலகம் முன்பு குவிந்த ஆப்கான் மக்கள் தாங்கள் பல ஆண்டுகளாக டெல்லியில் வசித்து வருவதாகவும், தங்களுக்கு அகதிகள் அட்டை மற்றும் கல்வி (Education), வேலை வாய்ப்பு (Job opportunity) ஆகியவற்றை வழங்குமாறும் பதாககளை ஏந்தி விடிய , விடிய டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வருபவர்களை இந்திய அரசு அகதிகளாக ஏற்க வேண்டுமென்றும், இந்தியாவில் நீண்ட கால விசா (Visa) விண்ணப்பிக்க அகதிகள் அட்டை, பிழைப்பு தேடி பிற நாடுகளுக்கு செல்ல ஐக்கிய அகதிகள் (Refugees) ஆணையத்தின் ஆதரவு கடிதம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் போராட்டத்தின் போது கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வந்த 78 பேரில் 16 பேர் செவ்வாய்க்கிழமை டெல்லியில் இறங்கினர். அவர்களில் குரு கிரந்த் சாஹிப்பின் 'ஸ்வரூப்புகளை' சுமந்து வந்த மூன்று ஆப்கானிய சீக்கியர்களும் அடங்குவர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 78 பேரும் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

செவ்வாய்க்கிழமை, 46 ஆப்கானிய சீக்கியர்கள் (Sikhs) மற்றும் இந்துக்கள் உட்பட 78 பேர், சீக்கிய வேதமான குரு கிரந்த் சாஹிப்பின் மூன்று பிரதிகளுடன், காபூலில் இருந்து துஷான்பே வழியாக ஏர் இந்தியா விமானத்தில் டெல்லிக்கு வந்தனர். மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி மற்றும் வி முரளீதரன் ஆகியோர், இந்திரா காந்தி சர்வதேச (ஐஜிஐ) விமான நிலையத்தில், ஆப்கானிலிருந்து வந்த சீக்கியர்களை வரவேற்றதோடு, சீக்கிய வேதத்தின் பிரதிகளையும் பெற்றுக்கொண்டனர். சாந்தோக்கின் கூற்றுப்படி, குரு கிரந்த் சாஹிப்பின் மூன்று பிரதிகளும் புதிய மகாவீர் நகரில் உள்ள குரு அர்ஜன் தேவ் ஜி குருத்வாராவுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

ALSO READ: Afghan crisis: டோக்கியோ பாராலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் ஆப்கன் தேசியக் கொடி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News