தாலிபானுக்கு கூகிள் கொடுத்த அடி: இவற்றை எல்லாம் பிளாக் செய்தது கூகிள்

ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த பிறகு, தாலிபான்கள் பயோமெட்ரிக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஊதிய தரவுத்தளங்களை தங்கள் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தக் கூடும் என்று நம்பப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 4, 2021, 12:22 PM IST
தாலிபானுக்கு கூகிள் கொடுத்த அடி: இவற்றை எல்லாம் பிளாக் செய்தது கூகிள் title=

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆக்கிரமிப்பு காரணமாக, ஆப்கானிஸ்தான் அரசின் பல மின்னஞ்சல் கணக்குகளை கூகுள் தற்காலிகமாக மூடியுள்ளது. முன்னாள் அதிகாரிகள் மற்றும் அவர்களின் சர்வதேச பங்காளிகளால் விட்டுச்செல்லப்பட்ட முக்கியமான டிஜிட்டல் ஆவணங்கள் கசியக்கூடும் என்ற அச்சத்தில் கூகுள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஆப்கானில் தாலிபான் (Taliban) ஆக்கிரமிப்பு பற்றிய பல வித மதிப்பீடுகளை தவிடுபொடியாக்கிய தாலிபான் போராளிகள், காபூலை ஒரு சில நாட்களிலேயே கைப்பற்றினார்கள் என்பது நினைவிருக்கலாம். இத்தகைய சூழ்நிலையில், வெளிநாட்டு அதிகாரிகள் அவசரமாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. இதன் காரணமாக பல முக்கிய ஆவணங்களும் பின்தங்கிவிட்டன.

தாலிபான் போராளிகள் முக்கிய கணக்குகளை அணுக விரும்புகின்றனர்

நிபுணர்களின் ஆலோசனையின் பேரில், கூகிள் நிறுவனம் (Google) ஆப்கானிஸ்தானின் நிலைமையை தொடர்ந்து மதிப்பீடு செய்து வருவதாகவும், தேவையான கணக்குகளை பாதுகாக்க தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூகுள் சார்பாக கூறப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை நன்கு அறிந்த ஒருவர், தாலிபான்கள் முன்னாள் அரசாங்க அதிகாரிகளின் கணக்குகளை அணுக விரும்புவதாக கூறினார். ஆகையால், முக்கிய தகவல்கள் தாலிபான்களின் கைகளுக்கு செல்லாத வகையில், முக்கிய சில கணக்குகள் மூடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ALSO READ:பெண்கள் உரிமை பற்றி கேட்ட பெண் நிருபர், நக்கலாக சிரித்த தாலிபான்கள்: ஆப்கானில் பரிதாபம்

இந்த அதிகாரிகள் இந்த கணக்குகளை பயன்படுத்தினர்

தகவல்களின்படி, உள்ளூர் ஆப்கானிஸ்தான் (Afghanistan) அரசு மற்றும் அதிபர் நெறிமுறை அலுவலகத்துடன், நிதித்துறை, தொழில், உயர்கல்வி மற்றும் சுரங்கத் துறைகளைச் சேர்ந்த  சுமார் இரண்டு டஜன் அதிகாரிகள், அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புக்குப் கூகிளை பயன்படுத்தி வந்தனர்

ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த பிறகு, தாலிபான்கள் பயோமெட்ரிக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஊதிய தரவுத்தளங்களை தங்கள் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தக் கூடும் என்று நம்பப்படுகிறது.

அச்சத்தில் தலைமறைவான ஊழியர்

அஷ்ரப் கானி அரசாங்கத்தில் பணிபுரிந்த ஒரு ஊழியர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், தாலிபான்கள் முன்னாள் அதிகாரிகளின் மின்னஞ்சல்களைப் பெற முயற்சிப்பதாக கூறினார். கடந்த மாதம், அவர் பணிபுரிந்த அமைச்சகத்தின் சேவையகங்களில் சேமிக்கப்பட்ட தரவைப் பாதுகாக்குமாறு தாலிபான்கள் தன்னிடம் கேட்டதாக அந்த ஊழியர் தெரிவித்தார்.

அந்த ஊழியர் அவ்வாறு செய்திருந்தால், தாலிபான்கள் முந்தைய அமைச்சக தரவு மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளை அணுகியிருப்பார்கள் என்று அவர் கூறினார். இந்த காரணத்தால்தான் தான் தலிபான்களின் பேச்சைக் கேட்காமல் தலைமறைவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ALSO READ: Guardian of Taliban:தலிபான்களின் மிகப்பெரிய 'பாதுகாவலர்' என பாகிஸ்தானின் ஒப்புதல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News