Video: வீட்டுக்கு சீக்கிரம் போகணும்... நடுவானில் எமர்ஜென்ஸி கதவை திறந்த பயணி... மூச்சுத்திணறிய பயணிகள்!

விமான பயணத்தில், சில பயணிகள் வழக்கத்திற்கு மாறாக செயல்பட்டு சக பயணிகளுக்கு கஷ்டத்தையும் கொடுக்கும் சம்பவங்கள் பலவற்றை கேட்டிருப்போம். ஆனால், இந்த சம்பவம் உங்களை அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் ஆழ்த்தும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 27, 2023, 05:45 PM IST
  • சக பயணிகள் மீது சிறுநீர் கழிப்பது, சக பயணிகளிடம் தவறாக நடந்து கொள்வது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.
  • அவசரகால கதவின் அருகே அமர்ந்திருந்த பயணி ஒருவர் நெம்புகோலை அழுத்தி அவசர வாயிலைத் திறந்தார்.
Video: வீட்டுக்கு சீக்கிரம் போகணும்... நடுவானில் எமர்ஜென்ஸி கதவை திறந்த பயணி... மூச்சுத்திணறிய பயணிகள்! title=

சியோல்:  விமான பயணத்தில், சில பயணிகள் வழக்கத்திற்கு மாறாக செயல்பட்டு சக பயணிகளுக்கு எரிச்சலையும் கஷ்டத்தையும் கொடுக்கும் சம்பவங்கள் பலவற்றை கேட்டிருப்போம். ஆனால், இந்த சம்பவம் உங்களை அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் ஆழ்த்தும். குறிப்பிட்ட இந்த சம்பவத்தில்,  பயணத்தின் நடுவில் பெரும் பரபரப்பை உருவாக்கியதோடு, மற்றவர்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளார். 

தென் கொரியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பயணி விமானத்தின் கதவை நடுவானில் திறந்தபோது இது போன்ற சம்பவம் நடந்தது. தென் கொரியாவில் உள்ள ஒரு விமான நிலையத்தில் ஏசியானா ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்குவதற்கு சற்று முன்பு அதன் கதவைத் திறந்த பயணி ஒருவர், தனக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், விமானத்திலிருந்து சீக்கிரம் இறங்க விரும்புவதாகவும் போலிஸாரிடம் கூறினார். கதவை திறந்த உடன், பலமாக வீசிய காற்றினால், பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. பயணிகள் பீதியின் ஆழ்ந்தனர்.

இந்தத் தகவலை காவல்துறை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். இது சியோலுக்கு தென்கிழக்கே 237 கிமீ தொலைவில் உள்ள டேகு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானம் காற்றில் சுமார் 200 மீ (650 அடி) இருந்தபோது, ​​அவசரகால கதவின் அருகே அமர்ந்திருந்த பயணி ஒருவர் நெம்புகோலை அழுத்தி அவசர வாயிலைத் திறந்தார். தற்போது அந்த பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானத்தின் அவசர கால கதவை நடுவானில் திறந்த வீடியோ:

வேலை இழப்பு காரணமாக மன அழுத்தம்

விசாரணையின் போது அந்த நபர் அதிகாரிகளிடம் சமீபத்தில் வேலை இழந்ததால் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும், மூச்சுத்திணறல் இருப்பதாகவும் போலீஸ் அதிகாரிகளிடம் கூறினார். அவர் விரைவாக இறங்க விரும்பிய நிலையில், தான் கதவைத் திறந்ததாக குறிப்பிட்டார். விசாரணைகளைத் தொடர்ந்து விமானப் பாதுகாப்புச் சட்ட விதிகளை மீறியதாகக் கூறப்படும் நபருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.

விமானத்தின் கதவை காற்றில் திறந்த பயணியினால் 194 பயணிகள் பீதியுடன் இருந்தனர். வீடியோவை இங்கே பார்க்கவும்

முன்னாள் கொரிய ஏர் கேபின் பாதுகாப்பு அதிகாரி ஜின் சியோங்-ஹியூன் கூறுகையில், தனக்குத் தெரிந்தவரை, இந்த வழக்கு இது வரை கேள்வியே படாத ஒன்று என தெரிவித்துள்ளார். இருப்பினும், விமானம் தரையில் இருந்த போது எந்த அனுமதியும் இல்லாமல் பயணிகள் அவசரகால கதவுகளை முன்பு திறந்துள்ளனர் என்றார். வெள்ளியன்று, தென் கொரிய போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஒருவர், பயணிகள் அறைக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள அழுத்தங்களில் உள்ள ஒற்றுமை காரணமாக தரை மட்டத்திலோ அல்லது அதற்கு அருகாமையிலோ அவசரகால கதவுகளை திறக்கலாம் என்று கூறினார்.

12 பயணிகள் மருத்துவமனையில் அனுமதி

இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை ஆனால் பீதியடைந்த 12 பயணிகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது, இதன் காரணமாக அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல், கடந்த மாதம் அமெரிக்காவின் மின்னசோட்டாவில் இருந்து அலாஸ்கா நோக்கிச் சென்ற டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் குடிபோதையில் இருந்த நபரை போலீஸார் கைது செய்தனர். அந்த நபர் ஒரு ஆண் விமானப் பணிப்பெண்ணை வலுக்கட்டாயமாக தாக்க முயன்றதாகவும், அவரது கழுத்தில் முத்தமிட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே,  சக பயணிகள் மீது சிறுநீர் கழிப்பது, சக பயணிகளிடம் தவறாக நடந்து கொள்வது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்நிலையில், விமான பயணத்தின் போது விமானத்தின் கதவை திறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | காக்பிட்டில் தோழியை உபசரித்த விமானி... ஏர் இந்தியாவுக்கு DGCA நோட்டீஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News