அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையில் 47 அடி நீளமுள்ள விந்து திமிங்கலத்தில் உடல் ஒதுங்கியுள்ளது. திமிங்கலத்தின் வயிற்றில் ஏராளமான பிளாஸ்டிக் பைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீன் மற்றும் வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம் திமிங்கலத்தின் பிரேதப் பரிசோதனையை மேற்கொண்டுள்ளது.
இறந்த விந்தணு திமிங்கலத்தின் வயிற்றில் மிக அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் கலந்திருப்பது நிபுணர்கள் குழுவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததால், திமிங்கலத்தால் சரியாக சாப்பிட முடியாமல போயிருக்கலாம் எனவும், அதனால், இறப்பு நேரிட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
விந்து திமிங்கலம் அரிய உயிரினமாக கருதப்படும் காரணம்
விந்து திமிங்கலம் இந்த உலகில் பற்கள் கொண்ட மிகப்பெரிய விலங்கு. விந்து திமிங்கலங்கள் மொத்தம் சுமார் 50 பெரிய பற்களைக் கொண்டுள்ளன. அவற்றின் பற்கள் கூம்பு வடிவிலானவை என்பதோடு, ஒவ்வொன்றும் 1 கிலோ எடையுள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது. சிறிய 'பிக்மி ஸ்பெர்ம் திமிங்கலங்கள்' மற்றும் மிகச் சிறிய 'குள்ள விந்து திமிங்கலங்கள்' போன்றவையும் உள்ளன. விந்து திமிங்கலத்தின் தலையில் உள்ள ஒரு உறுப்பு ஸ்பெர்மாசெட்டி என்று அழைக்கப்படுகிறது. இதில் எண்ணெய் நிரப்பப்பட்டிருக்கும்.
மேலும் படிக்க | சாலையில் வெடித்து சிதறிய 50 டன் எடையுள்ள திமிங்கிலம்; எங்கும் ரத்த வெள்ளம்..!!!
ஸ்பெர்ம் திமிங்கலம் கடல் விலங்கை வேட்டையாடும்போது, தன் செரிமான அமைப்பிலிருந்து ஒரு சிறப்பு வகை திரவத்தை வெளியிடுகிறது. வேட்டையாடப்படும் விலங்குகளின் கூர்மையான உறுப்புகள் அல்லது பற்கள், திமிங்கலத்தின் உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க இந்த திரவம் உதவுகிறது.
7 நாட்களில் 2 விந்து திமிங்கலங்கள் இறந்தன
புளோரிடா கடற்கரையில் இந்த மாதத்தில் இறந்த இரண்டாவது விந்தணு திமிங்கலம் இதுவாகும். விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்து இறப்புக்கான காரணத்தை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. 47 அடி நீளமுள்ள விந்தணு திமிங்கலத்தின் வயிற்றில் பிளாஸ்டிக்குடன் வேறு சில கழிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வயிற்றில் அதிக அளவு பிளாஸ்டிக் இருப்பதால், நீர்வாழ் உயிரினங்கள் சரியான உணவை உண்ண முடியவில்லை. இது மரணத்திற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட ஆராய்ச்சி கூறுகிறது.
வயிற்றில் காணப்படும் பொருட்களும் ஆய்வு செய்யப்படும்
புளோரிடாவின் கடற்கரை மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இறந்த விந்து திமிங்கலத்தின் வயிற்றில் காணப்படும் பிளாஸ்டிக் பைகள், வலைத் துண்டுகள் மற்றும் பிற அனைத்தும் ஆராய்ச்சி ஆய்வகத்தில் சோதனை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது, விந்தணு திமிங்கலத்தின் பிரேதப் பரிசோதனை மேற்கொண்டு வரும் ஆய்வுக் குழு தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.
ஸ்பெர்ம் திமிங்கலத்தின் வாந்தி ஒரு கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்பு வாய்ந்ததது. இது அம்பர்கிரிஸ் என அழைக்கப்படுகிறது. திமிங்கிலம் எடுத்த வாந்தி கடலின் மேற்பரப்பில் மிதக்கிறது. சூரிய ஒளி மற்றும் உப்பு நீரும் இணைந்து அம்பெர்கிரிஸை கல் போல் உருவாக்குகின்றன. நறுமணப் பொருள்களை தயாரிக்க இந்த அம்பெர்கிரிஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
மேலும் படிக்க | Whale Ambergris: வைரத்தை விட மிக மதிப்பு மிக்கது திமிங்கிலத்தின் வாந்தி..!!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR