மிகப்பெரிய மலையின் நடுவில் ஒரு பிரமாண்டசிலை!

'மீட்பர் கிறிஸ்து' என்பது, பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் அமைந்துள்ள இயேசு கிறிஸ்துவின் சிலையாகும். இது தேக்கோ கலையின் (Art Deco) மாபெரும் எடுத்துக்காட்டாகும். மேலும் இச்சிலை உலகிலேயே 4-வது மிகப்பெரிய இயேசுவின் சிலையாகும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 30, 2021, 04:23 PM IST
  • கொர்கொவாடோ மலையின் மீது ஒரு பெரிய சிலையினை வைக்கும் யோசனை வரலாற்றில் முதன் முதலில் 1850-களில் கத்தோலிக்க குருவான 'பேத்ரோ மரிய பாஸ்'-க்கு தோன்றியது
  • இரண்டாம் முறையாக இம்மலையின் மீது ஒரு சின்னம் எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கை 1921-ல் ரியோ நகர கத்தோலிக்க மக்களிடத்தில் எழுந்தது.
மிகப்பெரிய மலையின் நடுவில் ஒரு பிரமாண்டசிலை! title=

பிரேசில் : 'மீட்பர் கிறிஸ்து' என்பது, பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் அமைந்துள்ள இயேசு கிறிஸ்துவின் சிலையாகும். இது தேக்கோ கலையின் (Art Deco) மாபெரும் எடுத்துக்காட்டாகும். மேலும் இச்சிலை உலகிலேயே 4-வது மிகப்பெரிய இயேசுவின் சிலையாகும்.

இது 9.5 மீட்டர்கள் உயரமுள்ள அடிப்பீடத்தோடு சேர்த்து, 39.6 மீட்டர்கள் உயரமும், 30 மீட்டர்கள் அகலமும் உடையது. இதன் மொத்த எடை 635 டன்கள் ஆகும். இது திசுகா காடுகளில் உள்ள 700-மீட்டர் உயரமுள்ள கொர்கொவாடோ (Corcovado) மலையின் மீது நகரினை நோக்கியவாறு அமைந்துள்ளது.  கிறித்தவ சின்னமான இது, ரியோ நகரம் மற்றும் பிரேசில் நாட்டுக்கே சின்னமாக கருதப்படுகின்றது.இது வலுவூட்டப்பட்ட காங்ரீட் மற்றும் உருமாறிய பாறையின் வகையினைச் சேர்ந்த சோப்புக்கல்லாலும் கட்டப்பட்டதாகும்

brazil

கொர்கொவாடோ மலையின் மீது ஒரு பெரிய சிலையினை வைக்கும் யோசனை வரலாற்றில் முதன் முதலில் 1850-களில் கத்தோலிக்க குருவான 'பேத்ரோ மரிய பாஸ்'-க்கு தோன்றியது. அதனையடுத்து ஒரு பெரிய நினைவுச் சின்னம் கட்ட இளவரசி இசபெலிடமிருந்து நிதி கோரினார். இக்கோரிக்கைக்கு இளவரசி சரியாக செவி சாய்க்கவில்லை.பின்னர்,1889-ல் பிரேசில் நாட்டில் அரசு சமயம் பிரிவினை ஏற்பட்ட போது இக்கருத்து நிராகரிக்கப்பட்டது.

இரண்டாம் முறையாக இம்மலையின் மீது ஒரு சின்னம் எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கை 1921-ல் ரியோ நகர கத்தோலிக்க மக்களிடத்தில் எழுந்தது. பிரேசில் நாட்டின் கத்தோலிக்க மக்கள் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி ஒரு சிலையினை எழுப்ப நிதி திரட்டினர்.  இம்மலையின் மீது கட்டப்படவிறுந்த கிறிஸ்துவின் சிலையை முதலில், சிலுவையாகவோ அல்லது கிறிஸ்து தனது கரங்களில் உலகினை ஏந்தியவாறு நிற்பதாகவோ வடிவமைக்கப்பட இருந்தது, ஆனால் இறுதியில் அமைதியின் அடையாளமாக திறந்த கரங்களோடு இருப்பதுபோல் கட்டமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது.

சிலையின் மற்றொரு கோணம்

உள்ளூர் பொறியாளர் 'ஹிய்டோர் தா சில்வா கோஸ்டாவினால்' சிலை வடிவமைக்கப்பட்டு பிரஞ்சு சிற்பி 'பவுல் லான்டோஸ்கி'யினால் செதுக்கப்பட்டது.பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினால் லான்டோஸ்கியின் ஆய்வு முடிவை பரிசோதிக்கப்பட்டு, சிலுவை வடிவில் உள்ள இந்த சிலைக்கு எஃகினைவிடவும் வலுவூட்டப்பட்ட காங்ரீட் மிகவும் பொருத்தமானதாகக் கொள்ளப்பட்டது.

கட்டுமானம் 1922-1931 வரை, ஒன்பது ஆண்டுகள் நடந்தது. இதன் மொத்தம் செலவு $250000 ஆகும். இந்த நினைவுச்சின்னம் அக்டோபர் 12, 1931 அன்று திறக்கப்பட்டது.அக்டோபர் 2006-ல், இச்சிலையின் 75-வது ஆண்டு விழாவின் போது, ரியோ நகரின் பேராயர், கர்தினால் ஆஸ்கார் ஷீல்டு, இச்சிலையின் அடியில் ஒரு சிற்றாலயத்தை அருட்பொழிவு செய்தார். அதனால் இப்போது அங்கே திருமணமும், திருமுழுக்கு கொடுப்பது போன்ற திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கமான நிகழ்வாகியுள்ளது.

ஜூலை 7, 2007 அன்று லிஸ்பனில் நடந்த நிகழ்வின் போது, இச்சிலை புதிய ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாக சுவிட்சர்லாந்து நாட்டை மையமாகக் கொண்டு செயல்படும் 'நியூ7ஒன்டர்ஸ்' அறக்கட்டளையால் அறிவிக்கப்பட்டது.  மேலும் இச்சிலை பல நிகழ்பட விளையாட்டுகளிலும், நாடகங்களிலும், படங்களிலும், ஆவணங்களிலும் இடம்பெற்றுள்ளது.இச்சிலை எப்போதும் மழையிலும் வலுவான காற்றிலும் தாக்கப்படுவதால் இதனை அவ்வப்போது சீரமைப்பது அவசியமான ஒன்றாக உள்ளது.

ALSO READ கழிப்பறையில் ‘திடீர்’ பிரசவம்; ‘உள்ளே’ விழுந்த சிசு இறந்த சோகம்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News