உலகின் முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் குடிநீர் பாட்டில்கள் குறித்து ஆய்வில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தியா, அமெரிக்கா, சீனா, தாய்லாந்து, பிரேசில், இந்தோனேஷியா உள்ளிட்ட 9 நாடுகளில் உலகின் முன்னணி பிராண்ட் குடிநீர் பாட்டில்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அவற்றில் குடிநீர் பாட்டில்களில் 90% பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த 11 பிராண்டுகளில் இந்தியாவை சேர்ந்த பிஸ்லரியும் அடக்கம். இந்த சோதனை நியூயார்க் பல்கலைக்கழகத்தில் நடந்தது.
இது குறித்து, அந்த பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் ஷெர்ரி மேசன் கூறுகையில்:- "குறிப்பிட்ட பிராண்டுகளை குற்றம் சுமத்துவதற்காக இந்த சோதனையை மேற்கொள்ளவில்லை என்றும் எங்கும் பிளாஸ்டிக் நிறைந்து இருக்கிறது, பரவலாக காணப்படுகிறது என்பதை உணர்த்தவே இதனை மேற்கொண்டோம்" என்கிறார்.
மேலும், இது தொடர்பாக அமெரிக்காவின் ஆர்ப் மீடியா அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வில், 9 நாடுகளில் 19 இடங்களில் இருந்து 11 நிறுவனங்களைச் சேர்ந்த 259 குடிநீர் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டன.
இதில், ஒவ்வொரு லிட்டர் தண்ணீரிலும் 325 பிளாஸ்டிக் துகள்கள் இருந்தன. பரிசோதிக்கப்பட்ட 259 நாட்டில்களில் 17 மட்டுமே பிளாஸ்டிக் துகள்கள் இல்லாமல் உள்ளன. மற்றவற்றில் 90 சதவீதம் வரை பிளாஸ்டிக் துகள்கள் உள்ளன. இந்த பிளாஸ்டிக்கள் பாட்டில் மூடிகள் தயாரிக்க பயன்படுத்தப்படுவதாகும் என்றது.