கண்ணிவெடியில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாக்கிஸ்தானியர் பலி!

அப்கானிஸ்தானில், கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் (2 சிறுமிகள் உள்பட) பலியாகினர்!

Last Updated : Jan 30, 2018, 06:32 PM IST
கண்ணிவெடியில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாக்கிஸ்தானியர் பலி! title=

பெஸாவர்: அப்கானிஸ்தானில், கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் (2 சிறுமிகள் உள்பட) பலியாகினர்!

இச்சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கையில்... 

ஆப்கான்-பாக்கிஸ்தான் எல்லைப்பகுதிக்கு அருகில் உள்ள முக்பாலுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பாக்கிஸ்தானியர் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தின் போது 3 பெண்மனிகள் கண்ணிவெடியில் சிக்கியதாகவும், அங்கு அருகாமையில் நின்றிருந்த காரில் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 3 ஆண்கள் மற்றும் 2 சிறுமியர் இருந்தனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் 3 பெண்மனியரும் சம்பவயிடத்திலேயே உயிர் இழந்துள்ளனர். மற்றவர்கள் காயங்களுடன் அருகாமையில் இருந்த மாகான மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எனினும் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் அவர்கள் இருந்த கார் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டு அரசியல் நிர்வாகம் விசாரணையை துவங்கியுள்ளது.

அதேவேலையில், தேசிய சட்டமன்ற உறுப்பினர் சஜித் ஹுசைன் யூரி இந்த சம்பவத்தை கண்டித்தும், இச்சம்பவம் தொடர்பாக உயர் மட்ட விசாரணையை வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Trending News