உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி இஸ்ரேலில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது. அதன்படி பகுதியாக தற்போது அங்கு கடந்த 6 ஆம் தேதி முதல் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்டோருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்போது ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அந்நாட்டில் 2 பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு (COVID-19 outbreak) ஏற்பட்டு உள்ளது. டெல் அவிவ் நகரில் இருந்து வடக்கே 60 கி.மீ. தொலைவில் உள்ள பைனையமீனா என்ற நகரில் உள்ள பள்ளிகளில் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
ALSO READ | Effect of Third Wave: மூன்றாவது அலை; குழந்தைகளை எவ்வாறு பாதிக்கும்
இந்த கொடிய வைரஸ் காரணமாக மொத்தம் 45 மாணவர்களுக்கு பத்திப்பு ஏற்பட்டு இருக்கிறது என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதற்கிடையில் இஸ்ரேலில் மொத்த கொரோனா பாதிப்புகள் 8.39 லட்சத்திற்கும் சற்று கூடுதலாக உள்ளன. 6 ஆயிரத்து 400 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுவரை 55 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது அலையில் குழந்தைகளில் COVID-19 இன் அறிகுறிகள் என்னவென்று பார்போம்:
* குழந்தைகள் அதிக காய்ச்சல், குளிர், மூச்சு திணறல், இருமல், வாசனை இழப்பு, தொண்டை வலி, சோர்வு, தசை வலி, மற்றும் சளி போன்ற அறிகுறிகள் ஏற்படக்கூடலாம்.
*சில குழந்தைகளுக்கு எந்த அறிகுறிகளையும் ஏற்படாமல் இருக்கலாம்.
நீங்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்
1. COVID-19ன் அறிகுறிகள் தோன்றியவுடன், உங்கள் குழந்தையை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தவும். வைரஸ் இருப்பதை சோதித்து ஆக்ஸிஜன் அளவை கண்காணிக்கவும்.
2. கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்தால், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் மற்றும் செல்லப்பிராணிகளிடமிருந்து அவர்களை தனியாக வைக்கவும்.
3. கைக்குழந்தையாக இருந்தால், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் எல்லா நேரத்திலும் முககவசம் அணிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
4. ஒவ்வொரு முறை குளித்த பின்னரும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவும்.
5. ஆரோக்கியமான சுகாதாரப் பழக்கங்களைப் பின்பற்ற குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அறிவுரை கூறுங்கள்.
கொரோனா வைரஸின் மூன்றாவது அலை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று நாட்டின் சிறந்த குழந்தைகள் நிபுணர்கள் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் உங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது முக்கியம் என்றும் அவர்கள் தெளிவுப்படுத்தியுள்ளார்.
ALSO READ | DRDO 2-DG மருந்து அனைத்து கொரோனா திரிபுகளிலும் செயலாற்றுகிறது: ஆய்வு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR