நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு நாங்கள் தயார்: அதிரடி காட்டிய பாஜக!

நாளை நடக்கவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு நாங்கள் தயார் என்று பாஜக பொதுச் செயலாளர் ஷோபா கரண்ட்லஜே தெரிவித்துள்ளார்!

Last Updated : May 18, 2018, 12:33 PM IST
நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு நாங்கள் தயார்: அதிரடி காட்டிய பாஜக! title=

கர்நாடகா முதல்வர் எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற்று வருகிறது. நீதிபதிகள் சிக்ரி, அசோக் பூஷண, பாப்தே பெஞ்ச் விசாரணை நடத்துகிறது இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆளுநருக்கு எடியூரப்பா எழுதிய கடிதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

இது பற்றி நீதிபதிகள் மூன்று பேரும் சரமாரியாக கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். முக்கியமாக நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். முக்கியமாக, இந்த பாஜக கட்சிதான் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும், எடியூரப்பா எந்த அடிப்படையில் ஆட்சி அமைத்தார் என்று நிரூபிக்க வேண்டும் என்றுள்ளனர்.

 இதற்கு சிறப்பு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். நீதிமன்றம் இதை பார்வையிடும் என்று நீதிபதிகள் கூறினார். 15 நாட்கள் எல்லாம் அவகாசம் கொடுக்க முடியாது, உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறார். இதற்கு காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டுள்ளது.

ஆனால் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது, அமைச்சரவையை உடனே கூட்ட முடியாது என்று பாஜக உச்ச நீதிமன்றத்தில் வாதாடி உள்ளது. அமைச்சர்கள் எல்லோரும் வேறு இடத்தில் இருக்கிறார்கள், உடனடியாக அவையை கூட்ட முடியாது என்றது. எனினும், நீதிபதிகள் இதை ஏற்கவில்லை.

நீங்கள் என்ன செய்தாலும் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியே ஆக வேண்டும் என்று கூறியுள்ளனர். எல்லா எம்எல்ஏக்களுக்கும் சிறப்பு பாதுகாப்பு வழங்க, கர்நாடக டிஜிபிக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள  பாஜக பொதுச் செயலாளர் ஷோபா கரண்ட்லஜே...!

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்; நாளை நடக்கவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிப்போம், நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு நாங்கள் தயார் என்றார். 

Trending News