அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து விளக்கம் அளிக்காமல், பொள்ளாச்சி சம்பவம் குறித்து பேசுவது, இந்த சம்பவத்தை நியாயப்படுத்த முயற்சி செய்வதாக தோன்றுகிறது என எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.