WhatsApp, Facebook செயலிகளில் இருப்பது போல் twitter இணையத்திலும் செய்திகள் அனுப்புவதில் என்கிரிப்படட் முறையினை பயன்படுத்த twitter திட்டமிட்டுள்ளது!
இதர சமூக வலைதளங்களில் இருப்பது போல ட்விட்டரிலும் தனி மனிதருக்கு தனியாக செய்திகளை அனுப்பு வழிவகை செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் போஸ்பக்கத்தில் இருந்து பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை அடுத்து பாதுகாப்பு செயற்கூறுகளை அனைத்து சமூக வலைதளங்களும் கடைபிடித்து வருகின்றன.
சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தில் சில தொழில்நுட்பக் கோளாறு கண்டுப்பிடிக்கப் பட்டதாகவும், பின் அது சரிசெய்யப்பட்டதாகவும் தெரிவித்தது. எனினும் பாதுகாப்ப நலன் கருதி தங்கள் 33 கோடி பயனர்களின் பாஸ்வேர்டினை மாற்றிவிடும் படி கேட்டுக்கொண்டது.
மேலும், தற்போது ஏற்பட்டுள்ள கோளாறு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று கூறிய டுவிட்டர் எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று உறுதியளித்தது.
இதன் ஒருபகுதியாக கடந்த 2015-ம் ஆண்டு முதல் தீவிரவாதத்திற்கு ஆதரவாக கருத்துத் தெரிவிப்பவர்களின் கணக்குகளை டிவிட்டர் நிறுவனம் முடக்கி வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை 2,74,460 கணக்குகளை டிவிட்டர் முடக்கியுள்ளது. முந்தைய ஆண்டின் புள்ளி விவரங்களை ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 8.4% குறைவு ஆகும்.
இந்நிலையில் எதிர்கால பிரச்சணைகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள பயனர்கள் அனுப்பும் செய்திகளில் என்கிரிப்டட் என்னும் அம்சத்தினை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.