பொதுவாக மரத்தின் மீது கட்டப்படும் TreeHouse எனப்படுவது இளைப்பாருவதற்காக தான் கட்டப்படம், ஆனால் ஒடிசாவில் உயிருக்கு பயந்து கட்டப்பட்டுள்ளது!
ஒடிசா மாநிலம் சுபர்நபூர் பகுதியே சேர்ந்த குடும்பம் ஒன்று, காட்டு யானைகளின் அட்டகாசத்திற்கு பயந்து 50 அடி மரத்தின் உச்சியில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த குடும்பத்தில் 80 வயது முதியவர், 74 வயது மூதாட்டி, 3 சிறுகுழந்தைகள் உள்பட 7 பேர் வசித்து வருகின்றனர்.
நிலத்தில் இருக்கும் தங்களது வீட்டிற்கு காட்டு யானைகள் அடிக்கடி வந்து அட்டகாசம் செய்வதினால் உயிருக்கு பயந்து இந்த வீட்டினை கட்டி தினமும் 50 மரத்தில் ஏறி இறங்கி வருகின்றனர்.
யானைகளிடம் இருந்த தங்களை பாதுக்காத்துகொள்ள உள்ளூர் அதிகாரிகளிடம் உதவி வேண்டியும் யாரும் உதவ முன்வராததால் இந்த முடிவினை எடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.