அமெரிக்கா, லாஸ் வேகாஸ் நகரில் கேசினோ ஓட்டல் ஒன்றில் கடந்த ஞாயிறு இரவு நடைப்பெற்ற கச்சேரி கூட்டத்தினில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடிரென துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுத் தள்ளியதில் 59 பேர் பலியாகியுள்ளனர், 500-க்கும் அதிகமானவர் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தின் போது, துப்பாக்கிசுடும் சத்தம் கேட்டதும் அங்கு கூடியிருந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர்.
தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அமெரிக்கா, லாஸ் வேகாஸ் நகரில் கேசினோ ஓட்டல் ஒன்றில் நேற்று இரவு நடைப்பெற்ற கச்சேரி கூட்டத்தினில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடிரென துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுத் தள்ளியதில் 50 பேர் பலியாகியுள்ளனர், 200-க்கும் அதிகமானவர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிசுடும் சத்தம் கேட்டதும் அங்கு கூடியிருந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர்.
தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
நவம்பர் மாத இறுதியில் ஹைதராபாத் நகரில் நடைபெற உள்ள உலகளாவிய தொழில் முனைவோர் உச்சி மாநாட்டில் (GES) பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவான்கா இந்தியா வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தின் போது, உலகத் தொழில் முனைவோர் மன்றத்திற்கு தலைமை வகிக்க, டிரம்ப்பின் மகள் இவான்காவிற்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பினை ஏற்று இவான்கா இந்தியா வருகிறார்.
இவான்கா ஒரு அமெரிக்க தொழிலதிபர், முன்னாள் பேஷன் மாடல் மற்றும் அவரது தந்தையின் உதவியாளரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் மாத இறுதியில் ஹைதராபாத் நகரில் நடைபெற உள்ள உலகளாவிய தொழில் முனைவோர் உச்சி மாநாட்டில் (GES) பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவான்கா இந்தியா வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தின் போது, உலகத் தொழில் முனைவோர் மன்றத்திற்கு தலைமை வகிக்க, டிரம்ப்பின் மகள் இவான்காவிற்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பினை ஏற்று இவான்கா இந்தியா வருகிறார்.
இவான்கா ஒரு அமெரிக்க தொழிலதிபர், முன்னாள் பேஷன் மாடல் மற்றும் அவரது தந்தையின் உதவியாளரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா மீது பொருளாதார தடைவிதிக்கும் மசோதாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்து உள்ளார்.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு அதிகம் இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அமெரிக்காவின் செனட் சபை கமிட்டி நடத்திய விசாரணையில் உறுதியானது.
இந்நிலையில் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவிற்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துக் கையெழுத்திட்டுள்ளார்.
இந்தியா - சீனா - பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோகாலா பகுதியில் சீன ராணுவம் மேற்கொண்ட சாலைப்பணிகளை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளதால் சிக்கிம் எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்து உள்ளன.
இந்நிலையில் டோக்லாம் பதற்றத்தை தனிக்க இந்தியா - சீனா நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அமெரிக்கா கூறிஉள்ளது.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை அதிபர் டிரம்ப்பும், அவரது மனைவியும் வெள்ளை மாளிகையில் சிவப்புக் கம்பள உபசரிப்போடு வரவேற்றனர்.
டொனால்டு டிரம்ப் பிரதமர் மோடிக்கு விருந்து அளித்தார். பின்னர் இருவரும் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருவரும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்பொழுது டொனால்டு டிரம்ப் கூறியது,
மிகச்சிறந்த பிரதமரான நரேந்தி மோடி அமெரிக்கா வந்திருப்பது பெருமை அளிக்கிறது என்றும், பொருளாதார ரீதியாக பிரதமர் மோடி, சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டினார்.
அமெரிக்கா, போர்ச்சுகல், நெதர்லாந்து ஆகிய 3 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இன்று பிரதமர் மோடி டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அவரை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை திங்கட்கிழமையன்று அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். தனது பயணத்தின் முதல் நாடாக போர்ச்சுக்கல் செல்கிறார் மோடி. அந்நாட்டு பிரதமர் அந்தோனியோ கோஸ்டாவை அவர் சந்தித்துப் பேசும்போது இருநாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிரியாவில் அதிபராக உள்ள பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 7 ஆண்டாகளாக உள்நாட்டுப்போர் நீடித்து வருகிறது. இதில் இதுவரை குறைந்தது 3¼ லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 76 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது
பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. மேலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் எதிராக அமெரிக்கா படைகள் முகாமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன.
மறைமுகமாக ஜ.எஸ். தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்வதாக குற்றம்சாட்டி கத்தாருடன் ஆன தூதரக உறவை சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, ஏமன், அமீரகம், லிபியா அரபு நாடுகள் துண்டித்தன.
இதனால் மேற்கண்ட நாடுகளுக்கிடையே விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்த விவகாரத்தில் கத்தாருக்கு ஆதரவாக சில நாடுகளும், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆதரவாக சில நாடுகளும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வரும் 26-ம் தேதி அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்துப் பேச இருக்கிறார்.
இந்த சந்திப்பால் இந்திய-அமெரிக்க உறவு மேலும் வலுவடையும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரியில்அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, மோடி அவரை முதல் முறையாக சந்தித்துப் பேச இருக்கிறார். அமெரிக்காவில் புதிய அரசு அமைந்த பிறகு மோடி அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வதும் இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன்பு அதிபராக இருந்த பராக் ஒபாமாவுடன் மோடி மிகவும் நெருக்கமாக நட்பு பாராட்டி வந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில், யாகிமா நகரில் உள்ள பெட்ரோல் நிலையத்துக்குள் இருக்கும் பலசரக்கு கடையில் கணக்காளராக வேலை பார்த்து வந்தவர் விக்ரம் ஜர்யால். இவர் பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அமெரிக்கா சென்றார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் விக்ரம் ஜர்யால் கடையில் இருந்தபோது முகமூடி கொள்ளையர்கள் 2 பேர் கடைக்குள் நுழைந்து விக்ரம் ஜர்யாலிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணத்தை கேட்டு உள்ளனர்.
அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில் வசித்து வந்த ஹனுமந்தராவ், சசிகலா என்ற தம்பதியர். இவர்களுடைய பூர்வீகம், ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் ஆகும். இந்த தம்பதியருக்கு அனிஷ் சாய் என்று 7 வயதில் ஒரு ஆண் குழந்தை.
ஹனுமந்தராவ், சசிகலா இருவரும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள். ஹனுமந்தராவ் அலுவலகம் சென்று வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி சசிகலாவோ வீட்டில் இருந்தே அலுவலக வேலையை கவனித்து வந்தார்.
அமெரிக்கா-வின் தெற்கு கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த ஹர்னிஷ் பட்டேல் என்ற இந்திய வம்சாவளி அங்குள்ள லான்சஸ்டர் பகுதியில் பலசரக்கு கடை நடத்தியவாறு, கடையில் இருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்.
விண்வெளி ஆய்வில் இந்தியாவின் சாதனையை கண்டு அமெரிக்கா வியப்படைந்துள்ளது.
இந்தியா விண்வெளி ஆய்வில் பல புதிய சாதனைகளை அடுத்தடுத்து படைத்து வருகிறது.உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட செயற்கைகோள்கள், ராக்கெட்டுகள், ராக்கெட்டுகளை இயக்கும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கிரயோஜனிக் என்ஜின்களை சொந்தமாக உருவாக்கி, விண்வெளி ஆய்வு துறையில் வெற்றிகொடி நாட்டிவரும் இந்தியா, உள்நாட்டு தேவைக்காக மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு சொந்தமான பல்வேறு வகையான செயற்கை கோள்களையும் இங்கிருந்தபடி விண்ணில் செலுத்தி உலக நாடுகளின் கவனத்தை கவர்ந்து வருகிறது.
கன்சாஸில் இந்திய இன்ஜினியர் கொல்லப்பட்டதை கண்டிக்கிறேன். மீண்டும் இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.