CSD கவுண்டர்கள் மூலம் இந்த பொருட்களை விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டு, அதற்கு பதிலாக இந்திய தயாரிப்புகள் இங்கு விற்பனை செய்யப்படும் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
டெல்லி அரசு சார்பில் மதுபானம் விற்பனை கொள்முதல் மற்றும் நுகர்வு ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மாநிலத்திற்கு உள்ளது என்றும், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மேல்முறையீடு செய்தது.
மகாராஷ்டிராவில் மே 15 ஆம் தேதி காலை 10 மணி முதல் வீட்டுக்கு மதுபானம் விநியோகம் செய்யப்படும் என மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது, மேலும் சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
மது கடைகளில் கூடும் கூட்டத்தை தடுக்கும் புது முயற்சியில் புனே நகரில் மது விற்பனைக்கு ஆன்லைன் டோக்கன் முறையைத் தொடங்க மகாராஷ்டிரா கலால் துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் எவ்வளவு மது விற்பனை ஆனது. மண்டல வாரியமாக தெரிந்துக்கொள்ளலாம். அதேபோல இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இராணுவத் தலைமையகத்தின் காலாண்டு மாஸ்டர் ஜெனரலின் (QMG) கிளையின் முடிவைத் தொடர்ந்து மே 7 முதல் CSD கேன்டீன்களின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் முழு அடைப்பின் போது மது பான கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்கும் முயற்சியில், மது பாட்டில்களை Home Delivery செய்வதற்கான ப்ரத்தியேக வலைதளத்தை அறிமுகம் செய்துள்ளது சந்தீஸ்கர் அரசு!
எந்தவொரு மாலிலும் அல்லது சந்தை பகுதிகளில் [மார்க்கெட்] உள்ள மதுபான கடைகளை தவிர பசுமை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு மண்டலத்தில் அமைந்துள்ள அனைத்து கடைகளிலும் மதுபான விற்பனை செய்ய முடியும் என்று உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை தெளிவுபடுத்தியது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு காங்கிரஸ் MLA மதுபானக் கடைகளை மீண்டும் திறக்கக் கோரி, முதலமைச்சர் அசோக் கெஹ்லாட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார். சுவாரஸ்யமாக, கோட்டாவின் சங்கோட் தொகுதியைச் சேர்ந்த MLA பாரத் சிங், மது அருந்தினால் கொரோனா வைரஸைக் கொல்ல முடியும் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் மதுவுக்கு ஆதரவாக திட்டமிட்டு செய்யப்படும் பரப்புரைகள் கண்டிக்கத்தக்கவை என்று தெரிவித்து பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இமாச்சலத்தில் கூடிய விரைவில் மதுபானம் மலிவாக கிடைக்கும் எனவும், இரவு வரையிலும் ஹோட்டல்கள் மற்றும் பார்கள் திறந்திருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.